உலக நாடுகள் ஒன்றிணைந்தால் வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை விரட்டலாம்..!

'உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். '

உலக நாடுகள் ஒன்றிணைந்தால் வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனாவை விரட்டலாம்..!
மாதிரிப்படம் (Reuters)
  • News18
  • Last Updated: March 13, 2020, 11:35 AM IST
  • Share this:
உலக நாடுகள் அனைத்து ஒன்றிணைந்து எதிர்த்துப் போராடினால் கொரோனா வைரஸ் தாக்குதலை வரும் ஜூன் மாதத்துக்குள் ஒழிக்கலாம் என சீன தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் சற்று குறைந்து வருகிறது. புதிதாகப் பரவுவது கடுமையாகக் குறைந்துள்ளது. இத்தகைய சூழலில் சீனாவின் மூத்த மருத்துவ அதிகாரி ஜோங் நன்ஷான், "உலக நாடுகள் ஒன்றிணைந்தால் நிச்சயமாக வரும் ஜூன் மாதத்துக்குள் கொரோனா வைரஸை ஒழித்துவிடலாம்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் மட்டுமே தற்போது சீனாவில் கொரோனாவின் வீரியம் குறைந்துள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளின் அடிப்படையில் உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அனைத்து நாடுகளும் கூட்டு முயற்சி செய்தால் கொரோனா மறைந்துவிடும்” என்றுள்ளார்.


சீனாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 80,000-க்கும் அதிகமானதாக உள்ளது. இதுவரையில் கொரோனாவுக்குப் பலியானோரின் எண்ணிக்கை சுமார் 3,000-க்கும் அதிகம்.

மேலும் பார்க்க: வரலாறு காணாத பெரும் வீழ்ச்சி... 12 ஆண்டுகளுக்குப் பின்னர் பங்கு வர்த்தகமே நிறுத்தப்பட்டுள்ளது..!
First published: March 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading