சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாகாணம் முடக்கப்பட்டது: அவசரநிலைப் பிரகடனத்தால் மக்கள் அவதி

வாகனத்தை மறிக்கும் சீனா அதிகாரிகள்.

சீனாவில் தற்போது ஷீஜியாஸுவாங் என்ற பகுதி உயர் ரிஸ்க் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 73 பகுதிகள் மீடியம் ரிஸ்க் பகுதிகளாகவும், தலைநகர் பெய்ஜிங்கில் 8 இடங்கள் உயர் ரிஸ்க் பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.

 • Share this:
  சீனாவின் ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவலை அடுத்து, திடீரென்று அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

  இதனால் மிகவும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே குடிமக்கள் வெளியே செல்ல வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  இந்த திடீர் அவசர நிலையால் 3.7 கோடி மக்கள் புதன்கிழமை முதல் தங்கள் குடியிருப்பிலேயே முடங்கி உள்ளனர்.இதனிடையே தலைநகர் பீஜிங் அருகே அமைந்துள்ள ஹூபே மாகாணத்தில் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவினூடே மில்லியன் கணக்கில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் மருந்தை எடுத்துக் கொண்டனர்.

  சீனாவின் சமீபத்திய கொரோனா ஹாட்ஸ்பாட்டாக இது விளங்குகிறது. புதிதாக 115 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதோடு, கொரோனா நோய்க்குறி குணங்கள் இல்லாத 556 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

  மொத்தம் 784 உறுதி செய்யப்பட்ட கொரோனா வைரஸ் நோயாளிகள் அங்கு இருந்து வருகின்றனர்.

  சுமார் 7.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஹூபே மாகாணம், சமீபத்தில் உருமாறியுள்ள புதிய வீரியம் மிக்க கொரோனாவால் அதிக பாதிப்புக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 2019-ல் வுஹான் நகரில் கொரோனா பரவல் கண்டறிந்ததன் பின்னர் சீனா கடுமையான ஊரடங்கு விதிகளை அமுலுக்கு கொண்டு வந்து, பெரும்பாலான மாகாணங்களில் கொரோனா பெருந்தொற்றை விரைந்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

  இருப்பினும் நாட்டின் வடக்கு பிராந்தியங்களில் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் இப்போதும் ஒருவித ஊரடங்கு விதிகளின் கீழ் உள்ளனர். ஹைலோங்ஜியாங் மாகாணத்தை பொறுத்தமட்டில் புதன்கிழமை மட்டும் 28 பேர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது,அதில் 12 பேர்களுக்கு எவ்வித அறிகுறியும் இல்லை என தெரிய வந்துள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

  இதனையடுத்தே மாகாணம் முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு, மிகவும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பொதுமக்களை வீட்டில் இருந்து வெளியே அனுமதிக்கின்றனர்.

  சீனாவில் தற்போது ஷீஜியாஸுவாங் என்ற பகுதி உயர் ரிஸ்க் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. 73 பகுதிகள் மீடியம் ரிஸ்க் பகுதிகளாகவும், தலைநகர் பெய்ஜிங்கில் 8 இடங்கள் உயர் ரிஸ்க் பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  Published by:Muthukumar
  First published: