ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனா வைரஸ்: உயிரிழப்பு 56 ஆக உயர்வு - கடல் உயிரின வர்த்தகத்திற்கு தடை

கொரோனா வைரஸ்: உயிரிழப்பு 56 ஆக உயர்வு - கடல் உயிரின வர்த்தகத்திற்கு தடை

கோப்புப் படம்

கோப்புப் படம்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் வனவிலங்குகள், கடல் உயிரினங்களின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 2030 பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கடல் உணவில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக கருதப்படும் நிலையில் சீனா முழுவதும் வனவிலங்குகள், கடல் உயிரினங்களின் வர்த்தகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  அதன்படி அவற்றை வளர்க்கவோ, வேறு இடங்களுக்கு கொண்டு செல்லவோ, விற்கவோ கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  இப்படிப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என்றும் மக்களை அரசு எச்சரித்துள்ளது.

  மேலும் ஹாங்காங்கில் 5 பேரும், மெக்சிகோ மற்றும் தைவானில் 3 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு அரசு உறுதி செய்துள்ளது.

  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களிலும், சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அனைவரும் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்படுகின்றனர்.

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: China