திணறும் பிரிட்டன்... கொரோனாவுக்கு 60,733 பேர் பாதிப்பு: 7097 பேர் உயிரிழப்பு!

கோப்புப்படம்.

தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,733ஆக அதிகரித்துள்ளபோதும், குணமடைந்தோர் எண்ணிக்கை 135க்கு மேல் ஒன்றுகூட அதிகரிக்கவில்லை.

 • Share this:
  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான பிரிட்டனில், பாதிப்புகளும் உயிரிழப்புகளும் அதிகரித்துக் கொண்டே போக, குணமடைவோர் எண்ணிக்கையில் எந்த முன்னேற்றமும் இன்றி காணப்படுகிறது.

  உலகம் முழுவதும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள முதல் 10 நாடுகளின் பட்டியலில், பிரிட்டன் 8-வது இடத்தில் உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதி பிரிட்டனில் முதல்முதலாக இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வரை சுமார் 60,733 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 7,097 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 135 பேர் மட்டுமே குணமடைந்துள்ளனர்.

  கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குணமடைந்தோர் எண்ணிக்கை பிரிட்டனில் அதிகரிக்கவே இல்லை என்பது பெருந்துயரம். அதே நேரத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மார்ச் 28ம் தேதி 17,809 ஆக இருந்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, அடுத்த 10 நாட்களில் சுமார் 52,000 அதிகரித்தது. அதாவது 10 நாட்களில் பாதிப்பு 3 மடங்கு அதிகரித்தது.

  ஏப்ரல் ஒன்றாம் தேதி 2,352ஆக இருந்த உயிரிழப்பு, தற்போது 7097ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 24ம் தேதி நிலவரப்படி பிரிட்டனில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,600ஆக இருந்தபோது, குணமடைந்தோர் எண்ணிக்கை 135ஆக இருந்தது. தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,733ஆக அதிகரித்துள்ளபோதும், குணமடைந்தோர் எண்ணிக்கை 135க்கு மேல் ஒன்றுகூட அதிகரிக்கவில்லை.

  இதனிடையே, பிரிட்டனின் பிரதமர் போரிஸ் ஜான்சனும் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் குணம் பெற வேண்டும் என பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

   

  Also see:
  Published by:Rizwan
  First published: