ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தால் நலமுடன் இருக்கிறேன் - பிரேசில் அதிபர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபர் போல்சனாரோ மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தால் நலமுடன் இருக்கிறேன் - பிரேசில் அதிபர்
பிரேசில் அதிபர்
  • Share this:
தென் அமெரிக்க நாடுகளின் அதிபர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.

கொரோனா ஒரு சாதாரண காய்ச்சல்தான், அதை பூதாகரமாக காட்ட முயல்கிறது உலக சுகாதார நிறுவனம் என்று குற்றம்சாட்டியவர் பிரேசில் அதிபர் போல்சனாரோ. வதுசாரியான போல்சனாரோ, முகக்கவசம் கூட தேவையற்றது என்றும், தனிமனித இடைவெளியை பின்பற்ற அவசியமில்லை என்றும் அதிரடியாக கூறி வந்தார்.

அதைத்தொடர்ந்து, முகக்கவசம் அணியாமல், பொதுஇடங்களில் தன் ஆதரவாளர்களை கூட்டமாக சந்தித்தும் வந்தார். அத்துடன், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை குணப்படுத்துவதாகவும் தொடர்ந்து கூறிவந்தார்.


இந்நிலையில், புதன்கிழமையன்று போல்சனாரோவுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள போல்சனாரோ ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொள்வது போன்ற ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில், ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை எடுத்துக்கொள்வதால் தான் நலமுடன் இருப்பதாக போல்சனாரோ குறிப்பிட்டுள்ளார்.

Also read... கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று கஜகஸ்தானில் பரவுகிறது - சீனா விடுத்த எச்சரிக்கை

போல்சனாரோ வெளியிட்டுள்ள இந்த வீடியோவால், மருத்துவரின் பரிந்துரையில்லாமல் மக்கள் தாங்களாகவே ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொள்ள வாய்ப்பிருப்பதாக பிரேசிலில் பரவலாக அச்சம் நிலவுகிறது.தேவையின்றி ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தை உட்கொள்பவர்களுக்கு இதய பலவீனம் உட்பட பல பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்றும் அஞ்சப்படுகிறது. பிரேசிலில் தற்போது 17,60,000 பேர் கொரேனாவல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 69,000 பேர் உயிரிழந்திருக்கின்றனர்

மற்றொரு தென் அமெரிக்க நாடான பொலிவியாவின் இடைக்கால அதிபரான ஜியானின் ஆனஸ் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தனிமைப்படுத்துப்பட்டுள்ள அவர் தான் நலமாக இருப்பதாக ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல், வெனிசூலாவின் ஆளும் சோசியலிச கட்சியில் இரண்டாம் நிலையில் உள்ள டயயோஸ்டடோ கெபல்லோ கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். ஹோண்டரஸ் நாட்டின் அதிபர் ஜூவான் ஓர்லாண்டோவுக்கு கடந்த மாதம் கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார்.

உலக மக்கள் தொகையில் 8 சதவீதம் பேர் தென் அமெரிக்காவில் வாழ்கின்றனர். ஆனால், உலகம் முழுவதும் கொரேனவால் உயிரிழந்தவர்களில் ஐந்தில் ஒருவர் தென் அமெரிக்கராவர். தென் அமெரிக்க கண்டத்தில் இதுவரை 1,20,000 பேர் கொரேனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
First published: July 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading