• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • சீனாவில் கொரோனாவால் ஒரு இறப்புகூட இல்லாத நாள்: மூன்று மாதங்களுக்குப் பிறகு திரும்பும் இயல்புநிலை

சீனாவில் கொரோனாவால் ஒரு இறப்புகூட இல்லாத நாள்: மூன்று மாதங்களுக்குப் பிறகு திரும்பும் இயல்புநிலை

மாதிரிப்படம் (Reuters)

மாதிரிப்படம் (Reuters)

  • Share this:
    சீனாவில் மூன்று மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற நிலையை அடைந்துள்ளது.

    சீனாவின் ஊஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டது. அப்போது தொடங்கிய கொரோனா வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. அதனையடுத்து, ஜனவரி மாதத்திலிருந்து கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைத் தொடங்கியது. அன்று முதல் நேற்றுவரை தொடர்ச்சியாக, கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏற்பட்டு வந்தது.

    இதுவரையில் சீனாவில் 81,740 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 3,331 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், இன்று கொரோனா வைரஸால் உயிரிழப்பு ஏதும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று, சீனாவில் புதிதாக கொரோனா வைரஸால் 39 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று 32 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் கொரோனா வைரஸ் மீண்டும் பரவிவிடக் கூடாது என்பதில் சீனா கவனமாக இருந்துவருகிறது. சீனாவுக்கு வருவதற்கு வீசா வைத்திருப்பவர்களுக்கும், சீனாவில் வீட்டைக் கொண்டிருப்பவர்களுக்கும் வருவதற்கு தடை விதித்துள்ளது.

    சீனா மற்றும் வெளிநாட்டு விமான நிறுவனங்கள் வாரத்துக்கு ஒரே ஒரு விமானத்தை மட்டுமே இயக்கலாம் என்றும் விமானத்தில் 75% இருக்கைகளில் மட்டுமே ஆள்களை ஏற்றலாம் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனவரியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், நாளை முதல் ஊஹான் நகரை மக்கள் வெளியேறலாம் என்று அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போனில் இருக்கும் உடல்ஆரோக்கியத்தை சோதனை செய்யும் ஆப்பில் செய்யப்படும் சோதனையில் பச்சை நிற குறியீடு கிடைத்தவர்கள் மட்டுமே ஊஹான் நகரை விட்டு வெளியேறலாம் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: