சீனாவில் உயிரிழந்தோருக்கு 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி..!

சீனாவில் முதன்முதலில் கொரோனா குறித்து உலகிற்கு கூறிய மருத்துவர் லீ வென்லியாங்க் பெயரும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவில் உயிரிழந்தோருக்கு 3 நிமிடங்கள் மவுன அஞ்சலி..!
உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி
  • Share this:
சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோருக்கு அந்நாட்டு அரசு சார்பில் 3 நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சீனாவில் ஊஹான் மாகாணத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 47,249 பேர் இந்த வைரஸ் பாதிப்பின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று Zhongnanhai என்ற இடத்தில் நடந்த மவுன அஞ்சலி நிகழ்ச்சியில் அந்நாட்டு அதிபர் ஷிஜிங்க்பிங் பங்கேற்றார். அப்போது அந்நாட்டு கொடி அரைகம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அந்நாட்டு நேரப்படி காலை 10 மணிக்கு எல்லா பெரிய நகரங்களிலும் மவுன அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


மருத்துவ பணியாளர்கள் 3000-க்கு அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், அதில் 14 பேர் உயிரிழந்ததாகவும் அரசு தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் சீனாவில் முதன்முதலில் கொரோனா குறித்து உலகிற்கு கூறிய மருத்துவர் லீ வென்லியாங்க் பெயரும் இடம்பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading