Home /News /international /

கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் எதிர்காலத்தில் வரக்கூடும் - ஐ.நா. எச்சரிக்கை

கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் எதிர்காலத்தில் வரக்கூடும் - ஐ.நா. எச்சரிக்கை

கொரோனா இறப்பு நிவாரணம்

கொரோனா இறப்பு நிவாரணம்

இன்று சர்வதேச பெருந்தொற்று முன்னெச்சரிக்கை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஐ.நா. பொதுச் செயலாளரிடம் இருந்து இத்தகைய செய்தி வந்துள்ளது.

    கொரோனா போன்ற பெருந்தொற்றுகள் எதிர்காலத்தில் வரக்கூடும் என்றும் அதை எதிர்கொள்ளும் வகையில் மனித சமூக தயாராக வேண்டும் என்றும், ஐநா எச்சரிக்கை செய்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக சுமார் 2 ஆண்டுகளாக உலக நாடுகள் முடங்கிப் போயின. நிலைமை சிறிறு சிறிதாக முன்னேற்றம் அடைந்து கொண்டிருக்கும் நிலையில், அடுத்த ஆபத்தாக ஒமைக்ரான் வைரஸ் உலகம் முழுக்க பரவத் தொடங்கியுள்ளது.

    இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இருந்த போதிலும், ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து தற்போது தமிழ்நாட்டிலும் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது.

    முதல் கட்டமாக டெல்லி அரசு இரவு ஊரடங்கை அறிவித்ததுடன், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படாது என்று அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் திரும்பவும் முழு ஊரடங்கை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழத் தொடங்கியிருக்கிறது.

    இந்த நிலையில், ஒமைக்ரான் பரவல் மற்றும் கட்டுப்பாடு குறித்து ஐ.நா. பொதுச் செயலாளர் ட்வீட் செய்துள்ளார். அந்த ட்வீட் பதிவில், 'கொரோனாவால் மனித சமூகம் ஏராளமான துயரங்களை எதிர்கொண்டது. இருப்பினும், மனித சமூகம் எதிர்கொள்ளும் கடைசி பெருந்தொற்றாக கொரோனா பாதிப்பை கருத முடியாது. எதிர்காலத்தில் நம்மை அச்சுறுத்தக்கூடிய விஷயங்கள் நடைபெறலாம். அதற்காக நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.' என்று கூறியுள்ளார்.

    இன்று சர்வதேச பெருந்தொற்று முன்னெச்சரிக்கை தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, ஐ.நா. பொதுச் செயலாளரிடம் இருந்து இத்தகைய செய்தி வந்துள்ளது. முதன்முறையாக பெருந்தொற்று முன்னெச்சரிக்கை தினம் கடந்த ஆண்டு 27-ம்தேதி டிசம்பர் மாதத்தின்போது நடைபிடிக்கப்பட்டது.

    ஒமைக்ரான் பரவலை எதிர்கொள்ள பூஸ்டர் டோஸ்கள் போடப்பட வேண்டும் என்று ஐ.நா. உள்பட சர்வதேச சுகாதார அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் உலக நாடுகள் அனைத்திற்கும் பூஸ்டர் டோஸ் கிடைக்குமா, அல்லது அதை வாங்குவதற்குரிய பொருளாதார வசதி அனைத்து உலக நாடுகளிடமும் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தற்போது கொரோனாவுக்காக 2 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. ஒமைக்ரான் தொற்று பரவி வரும் நிலையில் பூஸ்டர் டோஸ் போட வேண்டிய நிலைக்கு சில உலக நாடுகள் தள்ளப்பட்டுள்ளன.
    Published by:Musthak
    First published:

    Tags: Omicron, United Nation

    அடுத்த செய்தி