பியர்ல் ஹார்பர், இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது கொரோனா: டிரம்ப்

கொரோனா வைரஸ் தாக்குதலை தான் ஒரு போரைப் போல பார்ப்பதாக அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

பியர்ல் ஹார்பர், இரட்டை கோபுர தாக்குதலை விட மோசமானது கொரோனா: டிரம்ப்
அமெரிக்க அதிபர் டிரம்ப்
  • Share this:
பியர்ல் ஹார்பர் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல்களை விட அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பாதிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், நாடு முன்னெப்போதும் சந்தித்திராத தாக்குதல் இது என்று கூறினார். தொடங்கிய இடத்திலேயே இது நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூறிய டிரம்ப், ஆனால் அது நடக்கவில்லை என்று சீனாவை மீண்டும் சாடினார். கொரோனா வைரஸ் தாக்குதலை தான் ஒரு போரைப் போல பார்ப்பதாகவும் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும் 1941-ல் பியர்ல் ஹார்பரில்நடந்த் தாக்குதல், 2001-ல் செப்டம்பரில் பல்வேறு இடங்களில்தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை விட, இந்த கொரோனா பாதிப்பு என்பது மிகப் பெரிய தாக்குதலாக உள்ளது என்று கூறினார்.


கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில், இதுவரை 72 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பஉயிரிழந்துள்ளனர்.  இதுவரை, 12 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also see...
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube
First published: May 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading