சீனாவின் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் உருவான இடம் குறித்து புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன.
கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பரவல் உச்ச கட்டத்தில் இருந்தபோது, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இதனை சீனா வைரஸ் என்று குற்றம் சாட்டியிருந்தார். இதேபோன்று சீனாவின் ஆய்வகங்களில் கொரோனா உருவாக்கப்பட்டதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக உலகம் முழுவதும் பேசப்பட்டது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் உருவான இடம் குறித்து 3 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 2 ஆய்வுகள், ஊஹான் நகரில் உள்ள மொத்த விற்பனை மார்க்கெட்டில் இருந்து பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிருடன் உள்ள பாலூட்டி ரக விலங்கில் இருந்து கொரோனா பரவியதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையும் படிங்க -
ஆஸ்திரேலியாவில் கொடிய விஷமுடைய ஜெல்லி ஃபிஷ்ஷிடம் சிக்கி 14 வயது சிறுவன் பரிதாப பலி
இதனை உறுதி செய்யும் ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். 3வது ஆய்வில், Wuhan மார்கெட்டில் இருந்து விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு பரவியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது 2வது முறையாக பரவியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க -
22/02/2022 : அற்புத தினத்தில் பிறந்த அதிசய குழந்தை... எங்கு தெரியுமா?
இதேபோன்று ஆய்வுக் கூடங்களில் கொரோனா உருவாக்கப்பட்டதா அல்லது அங்கிருந்து பரவியதா என்ற நோக்கத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும், இதற்கான ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.
அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் என்ன விலங்கில் இருந்து கொரோனா உருவானது என்பது உறுதி செய்யப்படவில்லை. முன்பு வௌவாலில் இருந்து கொரோனா பரவியதாக தகவல்கள் பரவின.
ஆனால் புதிய ஆய்வின்படி, சைனீஸ் ரக்கூன் என்ற நாயிடம் இருந்து பரவியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.
கொரோனா பேரழிவை ஏற்படுத்திச் சென்ற நிலையில், அது எப்படி உருவானது என்பதை உறுதி செய்தால் மட்டுமே இன்னொரு பேரழிவு ஏற்படுவதை தவிர்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.