ஹோம் /நியூஸ் /உலகம் /

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... பல முக்கிய நகரங்கள் முடக்கம்!

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... பல முக்கிய நகரங்கள் முடக்கம்!

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

 ஹாங்காங்கிலும் தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 27 ஆயிரத்து 647 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கொரோனா தொற்று பரவல் சற்று தணிந்து உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில் சீனா பல நகரங்களை முடக்கி வருகிறது. அந்நாட்டில் ஞாயிற்றுக் கிழுமை 3,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது கடந்த 2 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பாகும்.

  அதிக வேகத்துடன் பரவும் ஒமைக்கரானே பாதிப்பு அதிகரிக்க காரணம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தொற்று பரவலை கட்டுப்படுத்த, பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உயர் தொழில்நுட்ப நகரமான ஷென்சென்-னில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இங்கு 1 கோடியே 70 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஷென்சென்-னில் ஒரு வார காலத்திற்கு பேருந்தும் மெட்ரோ ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேப்போல் ஜிலின், என்சைம் நகரங்களும் முடக்கப்படுள்ளன.

  ஊரடங்கு மட்டுமல்லாமல், பரிசோதனைகளை அதிகரிக்கவும் சீனா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. தொற்று பாதிப்பை விரைவாக கண்டறியும் வகையில் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. 30 நிமிடங்களில் முடிவுகளை தெரிந்துக்கொள்ள வழிவகை செய்யும் ரேபிட் ஆன்டிஜென் சோதனைகளுக்கு சீன அரசு இதுவரை தடை விதித்திருந்தது.

  Also Read : கனடாவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு...

  ஹாங்காங்கிலும் தொற்று பரவல் மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அங்கு ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 27 ஆயிரத்து 647 பேருக்கு தொற்று உறுதியானதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 2019- ஆம் அண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஊஹானில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகமெங்கும் பரவி 60 லட்சம் பேரை பலிகொண்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: China, Corona, CoronaVirus, Lockdown