சீனா, அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதிலும் சீனாவில்/ ஜீரோ கொரோனா கொள்கை கட்டுப்பாடுகளை தளர்த்தியபின், அங்கு நோய் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் செல்வதால், மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. கொரோனாவில் உயிரிழப்பையும் சீனா சந்தித்து வருகிறது.
புதன் கிழமை அந்நாட்டில் 3ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், 10க்கும் குறைவானவர்களே உயிரிழந்ததாகவும் அரசு சார்பில் கூறப்பட்டது ஆனால் அங்கு நிலைமை மோசமாக இருப்பதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் லண்டனில் உள்ள அறிவியல் ஆய்வு நிறுவனமான ஏர்பினிடி நிறுவனம், சீனாவில் நிலவும் கொரோனா பரவல் குறித்து புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து அறி்க்கை வெளியிட்டுள்ளது.
சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து நிலைமை மோசமடையும் என்றும் தினசரி 10 லட்சம் பேர் வரை கொரோனாவில் பாதி்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் 5ஆயிரம் பேர் வரை தினசரி உயிரிழப்பைச் சந்திக்கலாம் என்றும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: 30 போர் விமானங்களை பறக்க விட்டு சீண்டும் சீனா.. அச்சத்தில் தைவான்
ஜனவரி மாதத்தில் இந்த பாதிப்பு உச்சத்தை அடைந்து தினசரி 37 லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் ஏர்பினிடி நிறுவனம் கூறியுள்ளது. அடுத்த அலை மார்ச் மாதம் வரும்போது, சீனாவில் தினசரி 42 லட்சம் பேர் கொரோனாவில் பாதிக்கப்படுவார்கள். உலகம் இதுவரை சந்திக்காத பேரழிவுகளை சீனா சந்திக்கும்”எனத் தெரிவித்துள்ளது.
சீனாவைப் போலவே, தென் கொரியாவிலும் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்துள்ளது. அங்கு ஒரே நாளில் 75,744 பேர் பிஎப்7 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேரில் ஒருவர் பிஎப்7 வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கொரியா நோய் கட்டுப்பாடு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலும் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிகை 10 கோடியை தாண்டியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona, CoronaVirus, Covid-19, Omicron BF 7 Variant