உலகளவில் 4 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. அமெரிக்காவில் அதிகபட்சமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் 4 லட்சத்தை கடந்தது கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை
கோப்பு படம்
  • Share this:
உலகளவில்  கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. சீனாவின் ஊஹானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தடம்படித்துள்ளது.

சர்வதேச அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,086,008 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 406,107 உயிரிழந்துள்ளனர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்தை நெருங்க உள்ளது.


அமெரிக்காவில் அதிகபட்சமாக 2,007,449 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், 1,12,469 உயிரிழந்தும் உள்ளனர். அதற்கடுத்து பிரிட்டனில் 40,452 பேரும், பிரேசிலில் 31,312 பேரும், ஸ்பெயினில் 27,136 பேரும் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

First published: June 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading