சார்ஸ் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டியது கொரோனா வைரஸ் உயிரிழப்பு!

சார்ஸ் வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கையைத் தாண்டியது கொரோனா வைரஸ் உயிரிழப்பு!
கொரோனா உயிரிழப்பு
  • Share this:
2003-ம் ஆண்டு உலகை உலுக்கிய சார்ஸ் வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

சீனாவில் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ். சீனாவில் கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவிப்பின்படி, சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 810-ஆக அதிகரித்துள்ளது.

2003-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய சார்ஸ்(SARS)வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 774. தற்போது அந்த எண்ணிக்கை கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தாண்டியுள்ளது. மேலும், சார்ஸ் வைரஸால் சுமார் 26 நாடுகளில் உள்ள 774 பேர் உயிரிழந்தனர். ஆனால், கொரோனாவைப் பொறுத்தவரையில் சீனாவில் மட்டும் 810 பேர் உயிரிழந்துள்ளனர்.


சீனாவில் மட்டும் 33,738 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கண்காணிப்பில் இருந்துவருகின்றனர். மேலும், 2,649 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. தற்போது, கொரோனா வைரஸால் 25 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also see:
First published: February 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்