• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

கொரோனா வைரசுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

 போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன்

கொரோனாவுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்த் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறிஉள்ளார்.

  • Share this:
    இங்கிலாந்தில் கொரோனா வைரசின் டெல்டா வகைப் பரவல் அதிகரித்திருப்பதால் லாக்டவுன் தளர்வுகள் அங்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனாவுடன் மக்கள் வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்த் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறிஉள்ளார்.

    கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 24,248 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால், இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 49,03,434 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 28 ஆயிரத்து 222 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த உயிரிழப்பு எண்ணிக்கையானது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு 28 நாட்களுக்குள் மரணம் அடைந்த நபர்களின் பதிவாகும்.

    அந்நாட்டில் ஊரடங்கு தளர்வின் ஒரு பகுதியாக முக கவசங்களை அணிந்து கொள்வது தனிநபர் சார்ந்த விருப்பம் என அற்விக்கப்பட்டு உள்ளது. இதற்கு மருத்துவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை ஜூலை 19ம் தேதி மேலும் தளர்த்த போரிஸ் ஜான்சன் முடிவெடுத்துள்ள நிலையில் கொரோனா வைரஸுடன் மக்கள் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் போரிஸ் ஜான்சன்.

    “இன்று நாம் மக்களின் சுதந்திரத்தை மீட்பது எப்படி என்பதை ஆலோசிப்போம். கொரோனா தொற்று இன்னமும் முடியவில்லை. கொரோனாவுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும். வரும் வாரங்களில் பாதிப்புகள் தொடர்ந்து உயரும் என்பதையும் நான் வலியுறுத்துகிறேன். இந்த வைரசுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். ​​நாம் அனைவரும் கொரோனா அபாயங்களை கவனமாக நிர்வகித்து அதனுடன் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    நடுவில் கொஞ்சம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன, ஆனால் கொரோனா டெல்டா வேரியண்ட் அதிகம் பரவியதால் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    ஆனாலும் கொரோனா பரவல் தடுப்பில் அடிப்படையான மாஸ்க் அணிவதில் சுதந்திரம் வழங்குவதை பலரும் எதிர்த்துள்ளனர். எல்லா தடுப்பு வியூகங்களையும் முறைகளையும் மக்களின் சொந்தத் தெரிவுக்கு விடுவதால் பேராபத்துதான் விளையும் என்று சமூக ஆர்வலர்கள், கல்விப்புல பேராசிரியர்கள், அறிவுஜீவிகள் ஆகியோர் போரிஸ் ஜான்சனுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: