Corona virus | தடுப்பூசி போடலையா... வெளியில் வராதீங்க: சீனாவில் புதிய கெடுபிடி

கோப்புப் படம்

கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் வெளியே வர தடை விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

  • Share this:
    கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் வெளியே வர தடை விதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

    கொரோனா முதன் முதலில் சீனாவின் வூகானில் தோன்றி உலகம் முழுதும் பரவி உலகம் முழுவதும் தற்போது 18,96,99,239 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 17,31,28,624 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 40 லட்சத்து 82 ஆயிரத்து 591 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்கு தற்போது 12,488,024 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 79,227 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவும் உள்ளது.

    இந்நிலையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் வாக்சின் என்ற தடுப்பூசியைத்தான் நம்பி களமிறங்கியுள்ளன. சீனாவில் மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு செல்ல தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடை விதிக்கப்படும் என சீனா அரசு அறிவித்துள்ளது.

    கொரோனா வைரஸானது சீனாவில் பரவு தொடங்கி இருந்தாலும், கட்டுப்பாடுகளை மேற்கொண்டதன் மூலம் அந்நாடு அதனை கட்டுப்படுத்தியது. இருப்பினும், ஆசிய நாடுகளில் டெல்டா வகை கொரோனா வேகமாக பரவிவரும் நிலையில், சீனா புதிய விதிகளை அறிவித்துள்ளது.

    அதன்படி, இரண்டாம் நிலை நகரங்களில் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதிக்குள், சுக்சியாங் நகர மக்கள் ஒரு தவணை தடுப்பூசியாவது செலுத்தியிருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லை எனில், மருத்துவமனைகள், நூலகங்கள், அருங்காட்சியகங்கள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லவும் பொது போக்குவரத்தை பயன்படுத்தவும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கொரோனா அதிகம் பரவிய நாடுகள், மரண எண்ணிக்கை:

    அமெரிக்கா - பாதிப்பு- 3,48,86,201, உயிரிழப்பு - 6,24,189, குணமடைந்தோர் - 2,93,41,802
    இந்தியா - பாதிப்பு - 3,10,25,875, உயிரிழப்பு - 4,12,563, குணமடைந்தோர் - 3,01,76,306
    பிரேசில் - பாதிப்பு - 1,92,62,518 உயிரிழப்பு - 5,39,050, குணமடைந்தோர் - 1,79,17,189
    ரஷ்யா - பாதிப்பு - 58,82,295, உயிரிழப்பு - 1,46,069, குணமடைந்தோர் - 52,78,976
    பிரான்ஸ் - பாதிப்பு - 58,33,341, உயிரிழப்பு - 1,11,429, குணமடைந்தோர் - 56,54,902

    மேலும் கொரோனா தொற்று ஆட்டிப்படைக்கும் நாடுகள் விவரம்:

    துருக்கி - 55,07,455
    இங்கிலாந்து - 52,81,098
    அர்ஜெண்டினா- 47,19,952
    கொலம்பியா - 45,83,442
    இத்தாலி - 42,78,319
    ஸ்பெயின் - 40,69,162
    ஜெர்மனி - 37,48,367
    ஈரான் - 34,64,055
    போலந்து - 28,81,151
    இந்தோனேசியா- 27,26,803
    Published by:Muthukumar
    First published: