• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • லட்சக்கணக்கில் குப்பையில் வீசப்படும் தடுப்பூசிகள்: 300 கோடி மக்கள் தவிக்கும் நிலையில் பயங்கரம்

லட்சக்கணக்கில் குப்பையில் வீசப்படும் தடுப்பூசிகள்: 300 கோடி மக்கள் தவிக்கும் நிலையில் பயங்கரம்

கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி

உலகம் முழுதும் 300 கோடி மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் கொரோனா ஆபத்தில் சிக்கி வரும் நிலையில் பல வளர்ந்த நாடுகள் தடுப்பூசி காலக்கெடு முடிந்து போய் லட்சக்கணக்கான தடுபூசிகளை குப்பைத் தொட்டியில் எறியும் கொடூரம் நடக்கிறது.

  • Share this:
    உலகம் முழுதும் 300 கோடி மக்கள் தடுப்பூசி கிடைக்காமல் கொரோனா ஆபத்தில் சிக்கி வரும் நிலையில் பல வளர்ந்த நாடுகள் தடுப்பூசி காலக்கெடு முடிந்து போய் லட்சக்கணக்கான தடுபூசிகளை குப்பைத் தொட்டியில் எறியும் கொடூரம் நடக்கிறது.

    மற்ற நாடுகளுக்கு இல்லாமல் தொடக்கத்திலேயே ஏகப்பட்ட கொரோனா தடுப்பூசிகளை ஆர்டர் செய்து வாங்கி டம்ப் செய்த வளர்ந்த நாடுகள் தடுபூசி காலாவதியானதால் குப்பையில் வீசி வருகின்றன. தங்கள் ஸ்டாக் செய்த தடுப்பூசிகளையே பயன்படுத்த முடியாமல் காலாவதியானவுடன் குப்பையில் வீசி வருகின்றனர். என்ன கொடுமை இது?

    நெதர்லாந்தில் தடுப்பூசிகள் வீணாகப் போய் காலாவதியாகி குப்பையில் கொட்டப்பட்டுள்ளது. ஆரிகனில் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வேஸ்ட் ஆகி குப்பைத் தொட்டிக்குச் ச்சென்றதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    அலபாமாவில் தடுப்பூசிகள் விரயம் செய்யப்படுகின்றன, இங்கு லட்சக்கணக்கானோர் இன்னமும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் 7,000 ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிகள், 47,000 பைசர் நிறுவன தடுப்பூசிகள், மாடர்னாவின் 11,000 தடுப்பூசிகள் காலாவதியாகி குப்பைத் தொட்டிக்குச் சென்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது, துயரமானது என்று டாக்டர் ஹாரிஸ் என்பவர் வருத்தம் தெரிவித்தார்.

    ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் உலகில் உற்பத்தி செய்யப்பட்ட கொரோனா தடுப்பூசிகளில் பாதியை தங்கள் வசம் வைத்திருந்தன. இது கடந்த ஆண்டு வாங்கியது தற்போது இதில் பல காலாவதியாகி இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்குச் சென்று விட்டது.

    வளர்ந்த நாடுகள் உலகமெங்கும் வாக்சின் இல்லாமல் 2வது அலை, 3வது அலை என்று ஏழை நாடுகள் அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில் அதீத கொள்முதல் செய்த வளர்ந்த நாடுகள் அவற்றைப் பயன்படுத்தாமல் காலாவதியாகி குப்பைத் தொட்ட்டியில் கொட்டுகின்றனர்.

    இஸ்ரேலில் சுமார்80,000 வாக்சின்கள் காலாவதியாகும் நிலையில் உள்ளன, போலந்தில் 73,000 டோஸ்கள் விரயமாகின. ஸ்லோவாக்கியாவிலிருந்து 1,60,000 வாக்சின்கள் ரஷ்யாவுக்கு மீண்டும் அனுப்பப்பட்டன. அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் சுமார் 8 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் ஆகஸ்ட் மாதத்திற்குள் காலாவதியாகிறது.

    தடுப்பூசிகளுக்கு எதிரான பிரச்சாரம், மக்களில் பலர் வாக்சின் எடுத்துக் கொள்ள மறுப்பது, விநியோகக் குறைபாடுகளினால் தாமதம் ஆகிய காரணங்கள் கூறப்படுகின்றன. மேலும் வாக்சின்களை ஸ்டோர் செய்வதிலும் சிக்கல்கள் உள்ளன. வாக்சின்கள் பெரும்பாலும் 6 மாதங்களில் காலாவதியாகுபவை.

    அமெரிக்காவில் விரயம் செய்யப்படும் வாக்சின்களினால் அங்கு கொரோனா அதிகரித்து வருவதோடு பிற ஏழை நாடுகளுக்கும் வாக்சின்கள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டு அலைஅலையாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஜெர்மனியிலும் இதே கதைதான், பிரான்ஸில் 50,000 கொரோனா தடுப்பூசி டோஸ்கள் குப்பைக்குச் சென்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆகஸ்ட் தரவுகளின் படி உலகில் 300 கோடி மக்கள் இன்னமும் ஒரு டோஸ் வாக்சின் கூட எடுத்துக் கொள்ளாமல் தவித்து வரும் நிலையில் லட்சக்கணக்கில் மேலை நாடுகள் தடுப்பூசிகளை விரயம் செய்து அழித்து வருகின்றன.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: