• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு.. ஊரடங்கு அமல்படுத்த திட்டம்!

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால், ஜெர்மனி பெல்ஜியம் நாடுகள் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளன. 

  • Share this:
    கொரோனா முதல் அலையின் போது, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதுடன், சர்வதேச விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. கொரோனா தடுப்பூசி செலுத்த தொடங்கியவுடன் நோய் தாக்கம் குறைந்ததால், ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில் ஐரோப்பியாவின் பெரும்பாலான நாடுகளில் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் நேற்று ஒரே நாளில் 59, 266 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று பரவல் அதிகரித்துள்ள தென் மாகாணமான பவாரியாவில் கிறிஸ்துமஸ் கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் கவலையுடன் தங்களது கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    பெல்ஜியத்தில் திரையரங்குகள், அருங்காட்சியம் செல்வதற்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இதற்கு முன்பு 12 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. அந்த கட்டுப்பாடு இப்போது 10 வயதுக்கு மேல் என்று அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்து வேலை பார்க்க விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டை டிசம்பர் 12 ம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    எனினும் தலைநகர் பிரஸ்ஸல்ஸ்-சில் கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக 18 அடி உயர கிறிஸ்துமஸ் மரம் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரியாவில் நோய் தொற்று அதிகரித்து வருவதால், அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசியை கட்டாயமாக்கும் முதல் ஐரோப்பிய நாடு ஆஸ்திரியாவாகும். அங்கு திங்கள் கிழமை முதல் 10 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

    நெதர்லாந்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரோட்டர்டாமில் ஏராளாமானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை எச்சரிக்கும் விதமாக போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

    ஆஸ்திரேலியாவில் பாதிப்பு அதிகரித்து வருவதால் நோய் தொற்று ஏற்படலாம் என கருதப்படும் 20 லட்சம் மக்கள் வெளியே வர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் 17- ஆம் தேதி தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் தடுப்பூசி போட்டுக்கொண்ட வீரர்கள் மட்டுமே பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சுவீடன், செக்குடியரசு, ஸ்லோவாக் கியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பிரான்ஸ் நாட்டில் 5-வது அலையின் தாக்கம் தொடங்கியுள்ள நிலையில், தினந்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Esakki Raja
    First published: