Home /News /international /

உலக நாடுகளை மிரட்டும் கொரோனா... சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் வரை பாதிப்பு

உலக நாடுகளை மிரட்டும் கொரோனா... சராசரியாக நாள் ஒன்றுக்கு 20 லட்சம் பேர் வரை பாதிப்பு

கடந்த நவம்பர் மாதம் புதிய வேரியன்டான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு 270 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் புதிய வேரியன்டான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு 270 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் புதிய வேரியன்டான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு 270 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    உலக நாடுகளை கொரோனா வைரஸ் மீண்டும் ஆட்டிப் படைக்க தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.

    கொரோனா, பாதிப்பிலிருந்து உலக நாடுகள் மீண்டு வந்த நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி மீண்டும் பொது முடக்கத்தை ஏற்படுத்தும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் சில வாரங்களுக்கு முன்பு கண்டறியப்பட்ட இந்த வைரஸ், விறுவிறுவென வேகமாக உலக நாடுகளுக்கு பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

    இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.

    கொரோனாவின் மற்ற வேரியண்ட்டுகள் உடன் ஒப்பிடும்போது ஒமைக்ரான் பெரிய அளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்று பல்வேறு மருத்துவ வல்லுனர்கள் கூறியிருந்தனர். இருப்பினும் இதன் பரவல் உலக நாடுகள் மத்தியில் அச்சத்தை உருவாக்கி உள்ளது.

    Also read: விரைவில் பூமியை கடக்க உள்ள சிறுகோள் - இதன் நகர்வில் சின்ன மாற்றம் என்றாலும் பூமிக்கு ஆபத்தாம்!

    இந்நிலையில் கொரோனா பரவலின் 3வது அலை உலக நாடுகளை கடுமையாக தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளனர்.

    கடந்த நவம்பர் மாதம் புதிய வேரியன்டான ஒமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் கொரோனா பாதிப்பு 270 சதவீதம் அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் கொரோனா தொடர்பான மரணங்கள் நாள் ஒன்றுக்கு 6,237 ஆக உலக நாடுகளில் உள்ளது. இது கடந்த 2020 அக்டோபர் மாதத்திலிருந்து பதிவாகி வரும் குறைந்த எண்ணிக்கையாகும். அதாவது, அக்டோபர் 2020-க்கு பின்னர் இறப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது.


    இவ்வாறாக இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தடுப்பூசி பரவலாக்கப்பட்டது முக்கிய காரணமாக உள்ளது. ஏற்கனவே 2 டோஸ்களை பெரும்பாலானோர் இந்தியாவில் செலுத்தியுள்ள நிலையில், பூஸ்டர் டோஸை செலுத்திக் கொள்ளவும் மக்களில் சிலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் 3வது அலை குறைவதற்கு மார்ச் மாதம் ஆகும் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

    ALSO READ  |  150 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை - பிரதமர் பெருமிதம்!
    Published by:Musthak
    First published:

    Tags: Covid-19

    அடுத்த செய்தி