சீனாவில் BF -7 வகை கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவமனைகளும் மருத்துவ முகாம்களும் நிரம்பி வழித்துக்கொண்டு இருக்கிறது. இந்த வாரத்தின் ஒரே நாளில் 3.7 கோடிபேருக்கு கொரோனத்தொற்று உறுதி ஆகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் பல நாடுகளும் சீனாவிற்கு செல்லும் விமானங்களை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். சீனாவில் இருந்து வருபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்நிலையில் அமெரிக்க அதன் உள்நாட்டு மக்களை சீனாவிற்கான பயணத்தை தவிர்க்குமாறு அறிவுறுத்தி வருகிறது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத் துறை தூதரகப் பணிகள் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அமெரிக்காவில் இருந்து சீனா செல்ல திட்டமிட்டுள்ள பயணிகள் தங்கள் பயணத்திட்டத்தை மறுபரிசீலனை செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.
20 நாளில் 25 கோடி பேர்... உச்சம் தொட்ட கொரோனா பரவல் : சீனா எடுத்த புதிய முடிவு
நோய் பரவல் அதிகம் இருப்பதால் சீனாவிற்கு பயணிகள் செல்வதைத் தவிர்ப்பது நல்லது. வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அங்சங்கள் மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் அங்கே ஏற்கனவே நிரம்பி வழியும் நோயாளிகளுடன் அமெரிக்காவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு மருத்துவ வசதி கிடைப்பது கடினம். அதற்கான ஏற்பாடுகளை அமெரிக்க அரசால் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளது.
எனினும், உள்நாட்டில் இருந்து கிளம்பும் நபர்களுக்கும் வெளிநாட்டில் இருந்து உள்நாட்டிற்குள் வந்த பயணிகளுக்கும் மருத்துவ உதவிகளை செய்ய முடியும். வெளிநாட்டில் தங்கி இருக்கும் அமெரிக்கர்களுக்கு அமெரிக்காவின் மருத்துவ உதவி கிடைக்காது என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.