கொரோனாவால் உலகளவில் தோன்றிய `Work From Home' கலாச்சாரம்… இதே நிலைமை நீடிக்குமா?

கொரோனாவால் உலகளவில் தோன்றிய `Work From Home' கலாச்சாரம்… இதே நிலைமை நீடிக்குமா?

வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை என்ன என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான YouGov உடன் இணைந்து News18 நடத்திய ஒரு ஆய்வில், வீட்டில் இருந்து பணிபுரிபவர்களில் ஒரு பகுதியினர் முன்பு போலவே அலுவலகங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை என்ன என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான YouGov உடன் இணைந்து News18 நடத்திய ஒரு ஆய்வில், வீட்டில் இருந்து பணிபுரிபவர்களில் ஒரு பகுதியினர் முன்பு போலவே அலுவலகங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.

  • Share this:
கொரோனா தொற்றுநோய்கள் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாக மக்கள் பல நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். இந்த காலகட்டங்களில் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிபுரியுமாறு கேட்டுக்கொண்டன. அதன்படி ஒர்க் ஃபிரம் ஹோம் கலாச்சாரம் ஆரம்பித்து சுமார் ஒரு வருடமே நிறைவடைய உள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் காரணமாக சில மாநிலங்கள் கட்டுப்பாடுகளை நீக்கி வருவதால் பெரிய தொழில் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் மீண்டும் திறக்கப்படவுள்ளன. 

இதன் காரணமாக ஊழியர்கள் மீண்டும் அலுவலகங்களுக்கு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் வீட்டில் இருந்து பணிபுரியும் ஊழியர்களின் மனநிலை என்ன என்பது குறித்து ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான YouGov உடன் இணைந்து News18 நடத்திய ஒரு ஆய்வில், வீட்டில் இருந்து பணிபுரிபவர்களில் ஒரு பகுதியினர் முன்பு போலவே அலுவலகங்களுக்குத் திரும்ப விரும்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இந்த குழு 2020ம் ஆண்டு டிசம்பர் 29 முதல் 2021ம் ஆண்டு ஜனவரி 3ம் தேதி வரை சுமார் 1015 நகர்ப்புற மக்களிடம் இருந்து தரவுகளை சேகரித்தது. 

மேலும் வேலைக்குச் செல்ல விரும்பும் மக்களைப் பற்றி பல சுவாரஸ்யமான அனுமானங்களைக் கண்டறிந்தது. கணக்கெடுப்புக்கான கேள்விகளுக்கு பதிலளித்த பத்து பேரில் கிட்டத்தட்ட ஏழு பேர் மீண்டும் அலுவலகங்களுக்குத் திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளனர். ஜே.எல்.எல் இந்தியாவின் அறிக்கைபடி, டிசம்பர் மாத அறிக்கையில் நிகர அலுவலக இடத்திற்கான குத்தகை 2020 ஆம் ஆண்டில் 44 சதவீதம் குறைந்து, ஏழு முக்கிய நகரங்களில் 25.82 மில்லியன் சதுர அடியாக இருந்தது என்று தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிவதால் கார்ப்பரேட்டுகள் தங்கள் விரிவாக்கத் திட்டங்களைத் தள்ளி வைத்துள்ளன என தெரிவித்துள்ளது. ஊரடங்கு நடவடிக்கைகள் நாம் பணிபுரியும் முறையை சீர்குலைத்ததால் அலுவலக ரியல் எஸ்டேட் சந்தை மிகவும் பாதிக்கப்பட்டது. ராயல் எஸ்டேட் சந்தைக்கு பெரும் பாதிப்பாக இருந்தாலும், ஊழியர்கள் வீட்டில் இருந்தபடி பணிபுரிவதால் கார்போரேட்டுகளுக்கு ஒரு நல்ல சேமிப்பாகவே அமைந்துள்ளது. இருப்பினும், வீட்டிலிருந்து வேலை செய்வது நீண்ட காலம் அல்லது நிரந்தர தீர்வாக இருந்தால் அது தனிப்பட்ட தொழிலாளர்களை மிகவும் மோசமாக பாதிக்கும் என பல ஆய்வுகள் காட்டுகின்றன. இது ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கிறது. முறையற்ற நாற்காலியில் நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது முதுகெலும்பு சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.

ஊரடங்கு காரணமாக ஏற்பட்டுள்ள அமைதியான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படும் இதுபோன்ற சிக்கல்கள் தற்போதைய தொற்றுநோய் காலத்தில் பன்மடங்கு பெருகியுள்ளது எனவும் ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இது குறித்து எலும்பியல் மற்றும் முதுகெலும்பு அறுவை சிகிச்சை ஆலோசகர் டாக்டர் சமீர் சால்வி கூறியதாவது, " மோசமான பணிச்சூழலியல் மற்றும் நாள் முழுவதும் மடிக்கணினிகளில் உட்கார்ந்திருப்பது பலருக்கு முதுகுவலி பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வேலைக்கு பழகியவர்கள் மோசமான தோரணையில் அமர வேண்டியுள்ளது" என தெரிவித்துள்ளார்.

மேலும் உடல் ரீதியான சிக்கலைகளைத் தாண்டி, வீட்டில் இருந்து பணிபுரியும் 5 ஊழியர்களில் 2 பேர் கொரோனா காரணமாக அதிகரித்த மன அழுத்தத்தை அல்லது பதட்டத்தை அனுபவித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை கூறுகிறது. அதேபோல, இந்திய ஊழியர்களில் 40% பேர் தொடர்ந்து நிதி உறுதியற்ற தன்மையை அனுபவித்து வருகின்றனர். இது அதிக அளவு நிதி அழுத்தங்களுக்கு வழிவகுக்கிறது எனவும் அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே மாதத்தில், வெளியான மற்றொரு அறிக்கையில்  முன்னெப்போதும் இல்லாத அளவு மக்கள் அதிக எரிச்சல் உணர்வை சந்திப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அதிகமான தகவல்தொடர்புகளும் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்தியாவில் வீட்டில் இருந்து பணிபுரியும் 41% ஊழியர்கள் வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கு இடையிலான மங்கலான கோடுகள் காரணமாக அதிகரித்த மன அழுத்த அளவைக் கையாளுகின்றனர்.

இதேபோல, ஹார்வர்ட் வணிகம் 16 உலகளாவிய நகரங்களில் 3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மீது நடத்திய இந்த ஆய்வில், தொற்றுநோயின் ஆரம்ப வாரங்களில் அவர்களின் சராசரி வேலை நாள் 8.2 சதவீதம் அதாவது 48.5 நிமிடங்கள் அதிகரித்திருந்ததாக கூறியுள்ளது. இது குறித்து, சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழக மருத்துவ மையத்தின் உளவியல் மற்றும் நடத்தை நரம்பியல் துறையின் தலைவர் முரளி ராவ் கூறியதாவது, ஆகஸ்ட் மாதத்தில் WFH வீட்டில் அதன் தனிப்பட்ட எல்லைகளை அழித்துவிட்டது என்று கூறினார்.

ஏனெனில் முன்பெல்லாம் அலுவலகம் சென்று வேலை பார்ப்பதால், வீடு சம்பந்தப்பட்ட வேலைகளை சரிவர கவனிக்க முடிந்தது. தற்போது வீட்டில் இருந்தே பணிபுரிவதால், வீட்டுவேலைகள், அலுவலக வேலைகள் இதற்கிடையில் குழந்தைகளின் குறுக்கீடு போன்றவற்றால் ஊழியர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம்,  நடந்த ஒரு ஆய்வில், 53% ஊழியர்கள் தங்கள் தொழில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இது பெண் ஊழியர்களிடையே இன்னும் மோசமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இரண்டு இந்திய பெண்களில் ஒருவர் அதாவது சுமார் 47% பெண்கள் அதிக மன அழுத்தத்தை அல்லது பதட்டத்தை அனுபவித்து வருவதாக ஒரு புதிய கணக்கெடுப்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், வேலை செய்யும் ஐந்து தாய்மார்களில் இரண்டுக்கும் மேற்பட்டவர்கள் குழந்தை பராமரிப்பு வழங்குவதற்காக தங்கள் அலுவலக நேரத்தையும் தாண்டி அதிக நேரம் பணிபுரிகின்றனர் என்பது தான். இந்த நிலையில் பில்லியனர் பில் கேட்ஸ் ஒரு ஆன்லைன் பேட்டியில் தெரிவித்தாவது, WFH கலாச்சாரம் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளது என்று கருதுவதாகவும், பல நிறுவனங்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோய் முடிந்த பின்னரும் இந்த முறையையே தொடரும் என்றும் கூறினார். இதனால் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் மனநிலையில் பெருமளவு தாக்கம் ஏற்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
Published by:Ram Sankar
First published: