Lockdown | கொரோனா பீதி: வைரஸ் லாக்டவுனால் ஒரு கோடி ஆஸ்திரேலியர்கள் வீட்டிலேயே முடக்கம்

வெறிச்சோடிக்கிடக்கும் பிரிஸ்பன் சாலை.

கொரோனா வைரஸ் ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து பரவி வருவதால் அங்கு பிரிஸ்பனில் செவ்வாய் மாலை முதல் 3 நாட்களுக்கு லாக்டவுன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, சுமார் 1 கோடி ஆஸ்திரேலியர்கள் பல்வேறு நகரங்களில் லாக் டவுன் காரணமாக வீட்டிலேயே முடக்கப்பட்டுள்ளனர்.

  • Share this:
    சமீபமாக இத்தகைய குறுகிய லாக்டவுன் உத்தரவுகள் சிட்னி, பெர்த், டார்வின் உள்ளிட்ட நகரங்களிலும் பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாமென்று உத்தரவிடப்பட்டனர்.

    ஆஸ்திரேலியாவில் இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளது, 910 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 24 புதிய தொற்றுக்கள் என்றவுடனேயே பீதியின் உச்சத்துக்குச் சென்று விட்டனர்.

    இது தொடர்பாக குவீன்ஸ்லாந்து மாநில முதல்வர் கூறும்போது, ‘முக்கிய நகரங்களில் லாக்-டவுன் உத்தரவு பிறப்பித்துள்ளோம், வெளிநாட்டிலிருந்து தொற்று இங்கு இறக்குமதியாகி வருகிறது’ என்றார்.

    Also Read: Corona 3rd Wave | கொரோனா அடுத்தடுத்த அலைகள் பற்றி நாம் ஆரூடம் கூற வேண்டாமே: டாக்டர் வி.கே.பால் வேண்டுகோள்

    ஆஸ்திரேலியா உள்நாட்டு எல்லை மூடல், வெளிநாட்டிலிருந்து வருபவர்க்ளுக்கு ஹோட்டலில் கட்டாய தனிமை போன்ற கண்டிப்பான நடைமுறைகளைக் கையாண்டு கொரோனா பரவலை கட்டுக்குள் வைத்திருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனாலும் இந்த டெல்டா வேரியண்ட் அங்கும் பீதியைக் கிளப்பியுள்ளது. வாக்சின் நடவடிக்கையைத் துரிதப்படுத்தாமல் அரசு மந்தமாக இருக்கும் வரை லாக் டவும் போட்டுக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று அங்கு மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.

    ஜூன் மத்தியில் சிட்னியில் 150 பேருக்கு டெல்டா வேரியண்ட் கொரோனா தாக்க இரண்டு வாரங்களுக்கு அங்கு முடக்கம் அறிவிக்கப்பட்டது. முகக்கவசம் அங்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் பார்னபி ஜாய்ஸ் முகக்கவசம் இல்லாமல் வெளியில் சென்றதல் 200 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டார்.
    Published by:Muthukumar
    First published: