கிண்டலுக்குள்ளான பேச்சு... செய்தியாளர் சந்திப்புகளால் பயன் இல்லை என்று டிரம்ப் விளக்கம்
கிண்டலுக்குள்ளான பேச்சு... செய்தியாளர் சந்திப்புகளால் பயன் இல்லை என்று டிரம்ப் விளக்கம்
டிரம்ப்
சமீபத்தில் கொரோனாவுக்கு கிருமிநாசினியை உடலில் செலுத்தி ஏன் சிகிச்சையளிக்கக் கூடாது என்று செய்தியாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியது பல தரப்பினராலும் கிண்டல் செய்யப்பட்டது.
செய்தியாளர்கள் சர்ச்சைக்குரிய கேள்விகளையே கேட்பதால் செய்தியாளர் சந்திப்புகளை நடத்துவதில் பயன் ஒன்றும் இல்லையென அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், செய்தியாளர்கள் உண்மையை வெளியிட மறுப்பதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ஊடகங்களுக்கு ரேட்டிங் கிடைக்கலாம் என்றும், மக்களுக்கு பொய்யான செய்திகள் மட்டுமே கிடைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கொரோனாவுக்கு கிருமிநாசினியை உடலில் செலுத்தி ஏன் சிகிச்சையளிக்கக் கூடாது என்று செய்தியாளர்கள் மத்தியில் டிரம்ப் பேசியது பல தரப்பினராலும் கிண்டல் செய்யப்பட்டது. இதனால் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது டிவிட்டரில் விளக்கமளித்துள்ளார் டிரம்ப்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.