Delta Variant in US | அமெரிக்காவில் கொரோனா டெல்டா வைரஸ் பீதி- பரவல் அடர்த்தியாக இருக்கும் என கணிப்பு

கொரோனா வைரஸ்

கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் தினசரி 11,500 அமெரிக்க குடிமக்கள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியதாக அமெரிக்க நோய்த் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது.

  • Share this:
    கோவிட்-19 வைரஸின் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அடர்த்தியாகப் பரவும் வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது அமெரிக்காவில் சில மாகாணங்களில் வெடிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியதால் அங்கு பீதி ஏற்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் கோவ்ஸ்பெக்ட்ரம் டிராக்டர் உதவியுடன் இந்த தகவல் டிராக் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 16ஆம் தேதி முதல் தினசரி 11,500 அமெரிக்க குடிமக்கள் வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியதாக அமெரிக்க நோய்த் தடுப்புத் துறை தெரிவித்துள்ளது. 10 லட்சம் பேரில் சராசரியாக 3.5 சதவீதம்பேர் நோய்த் தாக்கத்திற்கு உள்ளாகின்றனர்.

    பைசர்-பயான்டெக் தடுப்பு மருந்து 2 டோஸ் செலுத்தப்பட்ட பின்னர் நோயாளிக்கு 88 88 சதவீதம் பாதுகாப்பளிக்கிறது. ஆனால் ஒரு டோஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளுக்கு வெறும் 33 சதவீதம் மட்டுமே பாதுகாப்பு கிடைக்கிறது.

    இதனால் டெல்டா ரக வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அமெரிக்காவில் தற்போது அபாயத்தில் உள்ளார்கள்.

    Also Read: Corona 3rd Wave | கொரோனா அடுத்தடுத்த அலைகள் பற்றி நாம் ஆரூடம் கூற வேண்டாமே: டாக்டர் வி.கே.பால் வேண்டுகோள்

    இது பரவலாக இருக்காது என்றாலும் குறிப்பிட்ட சில மாகாணங்களில் அடர்த்தியாகப் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உணவு மற்றும் மருந்துக் கழக கமிஷனர் டாக்டர் ஸ்காட் காட்லீப் தெரிவித்துள்ளார்.

    அதாவது தடுப்பூசி அதிகம் போடப்படாத மாநிலம் மற்றும் முந்தைய அலையில் தொற்று பரவாத இடங்கள் இந்த டெல்டாவினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு மைய தகவல்களின் படி மொத்த அமெரிக்க மக்கள் தொகையில் 46.1% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    பிரிட்டனில் ஏற்கெனவே டெல்டா வேரியண்ட் பரவியிருப்பதால் அங்கிருந்து தங்களுக்கு இதைப்பற்றி புரிந்து கொள்ள தகவல்கள் கிடைக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கையுடன் உள்ளது.

    டெல்டா வேரியண்ட்டுக்கு எதிராக இரண்டு திறன்மிக்க தடுப்பூசிகள் இருப்பதால் பிரச்சனையில்லை என்கின்றனர் நிபுணர்கள்.
    Published by:Muthukumar
    First published: