உலகையே ஆட்டிவைக்கும் கொரோனா: பெருந்தொற்றின் பிடியில் இருந்து மீண்ட 9 நாடுகள்..

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்தாலும் சில சிறிய நாடுகள் அதை முற்றாக ஒழித்துக் கட்டி மீண்டு வந்திருக்கின்றன. அண்மையில் அந்த பட்டியலில் இணைந்த நியூசிலாந்து உள்பட அந்த 9 நாடுகளில் என்ன நடந்தது என தற்போது பார்க்கலாம்.

உலகையே ஆட்டிவைக்கும் கொரோனா: பெருந்தொற்றின் பிடியில் இருந்து மீண்ட 9 நாடுகள்..
மாதிரிப் படம்
  • Share this:
உலகம் முழுவதும் 188 நாடுகளில் கொரோனா பரவியுள்ள நிலையில் பெரும்பாலான நாடுகளால் அதை கட்டுப்படுத்தத்தான் முடிந்திருக்கிறது. கொரோனாவின் பிடியில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியவில்லை. அப்படிப்பட்ட நாடுகளுக்கு நம்பிக்கை தரும் வகையில் கொரோனாவை ஒழித்த 9 நாடுகளும் உலக வரைபடத்தில் இருக்கின்றன. அதில் முதல் நம்பிக்கை நியூசிலாந்து.

நியூசிலாந்து

சென்னையில் பாதி, அதாவது வெறும் 50 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாடான நியூசிலாந்து கொரோனா பரவிய உடன் ஊரடங்கை அமல்படுத்தியது. ஒன்று இரண்டல்ல, 75 நாட்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்ட நிலையில் அதற்குள் தொடர் பரிசோதனைகள் மூலம் கொரோனாவை வென்றது. கடந்த மாதம் 22ஆம் தேதி கண்டறியப்பட்ட கடைசி கொரோனா தொற்றாளரும் ஜூன் 8-இல் குணமடைந்தார். 1,500 பேர் பாதிக்கப்பட்டு 22 மரணங்களுடன் கொரோனா ஒழிந்தது.


தான்சானியா

கிழக்கு ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் கடவுளின் அருளால் கொரோனாவை ஒழித்துவிட்டதாக அறிவித்துள்ளார் அதிபர் ஜான் மகுஃபுலி. புதிதாக கொரோனா பாதித்தவர்களின் விவரங்களை வெளியிடுவதை ஆறு வாரங்களுக்கு முன் தான்சானியா நிறுத்திக்கொண்ட சூழலில் இப்படி ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 509 பேருக்கு மேல் பாதிக்கப்படவவில்லை என அதிபர் திட்டவட்டமாக கூறினாலும் உண்மையில் கொரோனா ஒழிந்துவிட்டதா அல்லது ஒளித்து வைத்திருக்கிறார்களா என சந்தேகமாகவே இருக்கிறது.

வாடிகன்இத்தாலிக்குள் இருக்கும் குட்டி நாடான வாடிகன் கடந்த 4ஆம் தேதி கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்டது. மொத்தம் 12 பேர் பாதிக்கப்பட்டதில் கடைசி தொற்றாளரும் குணமடைந்துவட்டதாக அதன் செய்தி தொடர்பாளர் மாட்டோ ப்ருனி அறிவித்தார். அதற்கு பின்பே செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் பிரார்த்தனை நடத்தினார்.

ஃபிஜி தீவு

9 லட்சம் பேர் வாழும் தென் பசிபிக் தீவான ஃபிஜியில் வெறும் 18 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து 45 நாட்களாக புதிய தொற்று உறுதியாகாத நிலையில், 100 விழுக்காடு குணமடைந்துவிட்டதாக பிரதமர் பிராங் பைனிமாரமா அறிவித்தார். சில பகுதிகளில் ஊரடங்கை அமல்படுத்தி, எல்லையில் கட்டுப்பாடுகளை விதித்து இதனை சாத்தியப்படுத்தியது ஃபிஜி தீவு.

மான்டிநெக்ரோ

ஐரோப்பிய நாடான மான்டிநெக்ரோ, முதல் தொற்று கண்டுபிடிக்கப்பட்ட 69-வது நாளில் கொரோனாவை ஒழித்திருக்கிறது. அந்த நாட்டில் மொத்தம் 324 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 9 பேர் மட்டுமே உயிரிழந்தனர். கொரோனாவை ஒழித்த முதல் ஐரோப்பிய நாடு மான்டிநெக்ரோ தான்.

சீசெல்ஸ்

இந்தியப் பெருங்கடலில் 115 குட்டி தீவுகளைக் கொண்ட சீசெல்ஸ் கடந்த மாதம் 18ஆம் தேதியே கொரோனா இல்லாத தேசமாகிவிட்டது. வெறும் 11 பேர் மட்டுமே பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.

மேற்கு இந்தியத் தீவுகளில் உள்ள St Kitts and Nevis

நாட்டில் பாதிக்கப்பட்ட 15 தொற்றாளர்களும் கடந்த மாதம் 19-ஆம் தேதி குணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். 15 பேருமே வெளிநாடு சென்று திரும்பியவர்கள் தான்.

கிழக்கு திமோர்

கிழக்கு திமோரில் மொத்தமே 24 பேர்தான் பாதிக்கப்பட்டனர். அவர்களும் குணமடைந்த நிலையில் கொரோனாவால் ஒருவர் கூட இறக்கவில்லை.

பபுவா நியூகீனி

பசிபிக் தேசமான பபுவா நியூகீனியிலும் 24 தொற்றோடு கொரோனா முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் படிக்க...

சமூகப் பரவல் என்றால் நீங்களும் இங்கே இருக்க முடியாது; நானும் பேசிக்கொண்டு இருக்க முடியாது - முதல்வர்









First published: June 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading