பிரேசிலில் குழந்தைகள் இடையே வேகமாகப் பரவும் கொரோனா: 1,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பு

பிரேசிலில் குழந்தைகள் இடையே வேகமாகப் பரவும் கொரோனா: 1,000-த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறப்பு

மாதிரிப் படம்

பிரேசிலில் குழந்தைகள் இடையே கொரோனா பரவல் அதிகளவில் காணப்படுவது, பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 • Share this:
  கொரோனா தொற்றால் பிரேசிலின் சுகாதாரக் கட்டமைப்பே முடங்கியுள்ளது. அந்நாட்டு அதிபர் பொல்சனாரோ தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்க எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அங்கு கண்டறியப்பட்டுள்ள P.1. என்ற மரபு திரிந்த கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், அந்நாட்டில், கடந்த மார்ச் 15-ஆம் தேதி வரை, ஒரு வயதுக்குட்பட்ட 518 பச்சிளங்குழநதைகள் உள்பட, 9 வயதுக்குள்பட்ட 852 குழந்தைகள் தொற்றால் இறந்ததாக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இந்த எண்ணிக்கையை காட்டிலும், இரண்டு மடங்கு கூடுதலான குழந்தைகள் தொற்றால் இறந்து இருக்கலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

  பரிசோதனை வசதி குறைவாக இருப்பது, தாமதமாக குழந்தைகளை மருத்துவமனைக்கு கொண்டு வருவது, சிகிச்சை வசதியின்மை, அறிகுறிகளைத் தவற விடுவது உள்ளிட்டவை காரணங்களாக கூறப்படுகிறது. . மேலும், அந்நாட்டின் சமூக, பொருளாதார அமைப்பின் காரணமாக சரியான சிகிச்சை கிடைக்காமல், கருப்பின மற்றும் ஏழைக் குழந்தைகள் அதிகளவில் இறப்பது அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

  இதனிடையே, இந்தியாவிலும் கொரோனா இரண்டாவது அலையில், பச்சிளம் குழந்தைகள் முதல் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மரபு திரிந்த கொரோனாவை காட்டிலும், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. எனவே, குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் பிறநோய்கள் தொடர்பான அறிகுறிகள் தோன்றினால், உடனடியாக பரிசோதனை மேற்கொள்வது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: