இங்கிலாந்தில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தொற்று பரவல் மீண்டும் வேகமெடுத்து, 3 மாதங்களில் இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. இதனால், ஊரங்கை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாடுகள் மட்டுமே மீண்டு வந்துள்ளன. பல நாடுகளில் கொரோனா வைரசின் புதிய வகை மற்றும் புதிய அலைகள் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
டெல்டா வகை உருமாறிய கொரோனா வைரஸ் இங்கிலாந்தில் வேகமாகப் பரவிவருகிறது. அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 7,000 மதல் முதல் 8,000 வரை கடந்த சில நாட்களாக இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து ஒரே நாளில் 9 ஆயிரத்தை தாண்டி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில், கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாளில் ஏற்பட்ட அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். அங்கே ஒரே நாளில் 9,055 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், 9 பேர்
கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இங்கிலாந்தில் தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வரும் வைரஸில் 90 சதவீதம் டெல்டா மாறுபாடு கொரோனா வைரஸ் என்று இங்கிலாந்து சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதனிடையே இங்கிலாந்தில் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வருகிற 21ஆம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால், பிரதமர் போரிஸ் ஜான்சன், மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதன்படி, ஜூலை 19ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தார்.
அங்கே,
ஊரடங்கை நீட்டிக்கப்படுவதற்கான முன்மொழிவுக்கு இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் ஒப்புதல் அளித்துள்ளது. 461 உறுப்பினர்கள் ஊரடங்கு நீட்டிப்புக்கு ஆதரவு அளித்த நிலையில், 60 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
Must Read : பெற்ற தாயையே கொன்று உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட ஸ்பெயின் இளைஞருக்கு 15 ஆண்டு சிறை
இந்நிலையில், அமெரிக்காவில் புதிதாக 12,998 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 419 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கே மொத்தம் 3.43 கோடி பேருக்கு
கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6.16,141 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 85,861 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,673 பேர் உயிரிழந்துள்ளனர். அந்நாட்டின் மொத்த பாதிப்பு 1.76 கோடியாக உயர்ந்துள்ளது.
உலகளவில் 17,77 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 38.48 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 16,22 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.