அமெரிக்காவில் கடன் வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் என்னும் அளவிற்கு அந்நாட்டு மத்திய வங்கி குறைத்துள்ளது.
கொரோனா அச்சுறுத்தலால் சரிந்து வரும் பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியாக கடன் வட்டி விகிதத்தை பூஜ்ஜியத்தில் இருந்து கால் சதவீதம் என்னும் வரம்பிற்குள் இருக்குமாறு அமெரிக்க மத்திய வங்கி குறைத்துள்ளது.
2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது வட்டி விகிதத்தை குறைத்த அமெரிக்கா தற்போது இரண்டாவது முறையாக அந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. இதேபோல தென்கொரிய மத்திய வங்கியும் கடன் வட்டிவிகிதத்தை 50 புள்ளிகள் குறைத்துள்ளது. இதனால் இதுவரை இல்லாத அளவான 0.75 என்னும் அளவில் தென் கொரிய வட்டி விகிதம் குறைந்துள்ளது.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.