• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலக அளவில் 82,000-ஐக் கடந்தது கொரோனா உயிரிழப்பு..!

உலக அளவில் 82,000-ஐக் கடந்தது கொரோனா உயிரிழப்பு..!

(படம்: Reuters)

(படம்: Reuters)

அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியைத் தொடர்ந்து பிரான்சிலும் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

  • Share this:
    உலக அளவில் கொரோனா உயிரிழப்பு 82 ஆயிரத்தை கடந்த நிலையில் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் ஆயிரத்து 966 பேர் உயிரிழந்தனர்.

    கொரோனா பெருந்தொற்றின் கோரப்பிடியில் சிக்கி உலக நாடுகள் சின்னாபின்னமாகி வருகின்றன. வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 21 ஆயிரம் பேர் குணமடைந்த நிலையில் உயிரிழப்பு 12 ஆயிரத்து 837-ஆக உள்ளது.

    நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்ட நிலையில் ஏறத்தாழ 2 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஸ்பெயினில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்பு 14 ஆயிரத்தை கடந்துள்ளது. இத்தாலியில் 1 லட்சத்து 35 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிகப்பட்ட நிலையில் 17 ஆயிரத்து 127 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் கடந்த சில நாட்களாக 5-வது இடத்தில் இருந்த பிரான்ஸில், ஒரே நாளில் 11 ஆயிரம் பேருக்கு தொற்று ஏற்பட்டதால் 4-வது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலியைத் தொடர்ந்து பிரான்சிலும் உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

    ஜெர்மனியில் பாதிப்பு 1 லட்சத்தை கடந்த போதும் உயிரிழப்பு 2 ஆயிரமாகவே உள்ளது. பிரிட்டனில் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரத்தை தாண்டியபோதும் குணமடைந்தோர் எண்ணிக்கை கடந்த 3 நாட்களாகவே 135-ஐ தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    Also see...











    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: