• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலகம் முழுவதும் 23 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: 1,63,000-த்தைக் கடந்த உயிரிழப்பு

உலகம் முழுவதும் 23 லட்சத்தைக் கடந்த கொரோனா பாதிப்பு: 1,63,000-த்தைக் கடந்த உயிரிழப்பு

கோப்புப்படம் (Reuters)

கோப்புப்படம் (Reuters)

ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இத்தாலியில் பாதிப்பு ஒரு லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது.

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,63,834 ஆக அதிகரித்துள்ளது. 

    அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்து 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளதுடன், உயிரிழப்பு 40 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. நியூயார்க்கில் கடந்த 24 மணி நேரத்தில் 540 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களின் இறப்பு விகிதத்தை ஒப்பிடும் போது, உயிரிழப்பு குறையத் தொடங்கி விட்டதாகத் தெரிகிறது. ஸ்பெயினில் கடந்த ஒரு மாதத்தில் இல்லாத வகையில் உயிரிழப்பு விகிதம் குறைந்துள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 42 ஆயிரத்தை கடந்துள்ளதன் மூலம் அதிகம் பாதிக்கப்பட்ட 10 நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இணைந்துள்ளது. தென்கொரியாவில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் விளைவாக, நாள்தோறும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை ஒற்றை இலக்கமாக சரிந்துள்ளது.

    ஸ்பெயினில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 96 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இத்தாலியில் பாதிப்பு ஒரு லட்சத்து 75 ஆயிரத்தை கடந்துள்ளது. இவ்விரு நாடுகளிலும் உயிரிழப்பு தலா 20 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், தற்போது பிரான்சிலும் உயிரிழப்பு 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. ஜெர்மனியில் பாதிப்பு ஒரு லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது. உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,63,834 ஆக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: