• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • உலக அளவில் 14 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழப்பு

உலக அளவில் 14 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் ஒரே நாளில் 1,000 பேருக்கு மேல் உயிரிழப்பு

  • Share this:
    உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 லட்சத்து 74 ஆயிரமாக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 77 ஆயிரத்தை கடந்துள்ளது.

    உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்து 77 ஆயிரமாக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாயிரத்தை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் 743 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

    இத்தாலியில் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. திங்கட்கிழமையன்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மூவாயிரத்து 600 பேர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 3 வாரங்களாக நாள்தோறும் அதிகரித்து வந்த பாதிப்பு, முதன்முதலாக குறைந்துள்ளதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

    ஜெர்மனியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரான்சிலும் பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கியுள்ளது. ரஷ்யாவில் முதல்முறையாக 24 மணிநேரத்தி்ல் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜப்பானில் கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வெளிப்பட்டது முதல், கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் கொரோனாவால் ஒரு மரணம் கூட நிகழவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்ட 32 பேரும் வெளிநாட்டவர்கள் என சீனா தெரிவித்துள்ளது.

    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: