• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கொரோனா மூன்றாவது அலை... பூஸ்டர் தடுப்பூசிகள் தேவையா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்!

கொரோனா மூன்றாவது அலை... பூஸ்டர் தடுப்பூசிகள் தேவையா? உலக சுகாதார நிறுவனம் விளக்கம்!

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி

குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் தினமும் செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகளை விட  பிற நாடுகளில் ஆறு மடங்கு அதிகமாக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என உலக சுகாதார நிறுவன இயக்குநர் டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ் கூறியுள்ளார்.

  • Share this:
    கொரோனா மூன்றாவது அலை குறித்த அச்சம் மக்களிடையே நிலவி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒருசில நாடுகள் பூஸ்டர் தடுப்பூசிகளை போடத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி தொடர்பாக முக்கிய விளக்கத்தை உலக சுகாதார  நிறுவனம் வெளியிட்டுள்ளது.

    கொரோனா 2வது தொற்றின் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வெகுவாக குறைந்துள்ளது. அதேவேளையில், சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஐரோப்பாவில் கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.  இதேபோல், கொரோனா மூன்றாவது அலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் அரசு மற்றும் பொதுமக்கள் இடையே நிலவு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பூஸ்டர் தடுப்பூசிகளை (Booster dose) போடத் தொடங்கியுள்ளன.

    இந்தியாவிலும் பூஸ்டர் தடுப்பூசிகளைசெலுத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை வைத்துள்ளன. இந்நிலையில், பூஸ்டர் தடுப்பூசி என்பது ஊழல் நடவடிக்கை என்றும் உடனடியாக அது நிறுத்தப்பட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் (World health organistation) கேட்டுகொண்டுள்ளது.

    இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர்  டெட்ரோஸ் அதானம் கேப்ரெயேசூஸ், ஒவ்வொரு நாளும் குறைந்த வருவாய் உள்ள நாடுகளில் செலுத்தப்படும் முதன்மை கொரோனா தடுப்பூசிகளை விட  பிற நாடுகளில் ஆறு மடங்கு அதிகமாக பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன என குறிப்பிட்டார்.

    இதையும் படிங்க: ஈக்வடார் சிறையில் கேங் வார்... வெடிகுண்டுகள் வீசி நடந்த மோதலில் 70 பேர் உயிரிழப்பு


    "உலகெங்கிலும் உள்ள சுகாதாரப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள குழுக்கள் இன்னும் தங்கள் முதல் டோஸிற்காக காத்திருக்கும் போது, ஆரோக்கியமான பெரியவர்களுக்கு பூஸ்டர்களை வழங்குவது அல்லது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது அர்த்தமற்றது” என்று தெரிவித்துள்ள அவர், நோய் எதிர்ப்பு திறன் குறைவவாக உள்ளவர்கள் இதில் விதிவிலக்கு என்று கூறியுள்ளார்.

    மேலும் படிங்க: "நான் ஒரு டைம் ட்ராவலர், 2027ல் இருக்கிறேன்.. நான் தான் எதிர்கால பூமியின் கடைசி மனிதன்".. TikToker வெளியிட்ட வீடியோ!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesh M
    First published: