Home /News /international /

ஒரே நாளில் ஒரு லட்சம்பேருக்கு கொரோனா பாதிப்பு... தடுப்பு நடவடிக்கை தோல்விகளால் திணறும் பிரிட்டன் அரசு

ஒரே நாளில் ஒரு லட்சம்பேருக்கு கொரோனா பாதிப்பு... தடுப்பு நடவடிக்கை தோல்விகளால் திணறும் பிரிட்டன் அரசு

கொரோனா

கொரோனா

ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி சிறப்பான செயல்பாட்டை வழங்குவதாக பல்வேறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஐரோப்பிய நாடான பிரிட்டனில் ஒரே நாளில் சுமார் 1 லட்சம் பேக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 143 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளதால் பிரிட்டன் அரசு கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.

    கொரோனா பாதிப்பின் முதல் அலை மற்றும் 2ம் அலைகளின் போது பிரிட்டன் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 99676 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 143 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை பிரிட்டனில் 7 லட்சத்தை கடந்துள்ளது.

    இதற்கிடையே பிரிட்டனில் கொரோனா தடுப்பு ஊசிகளை மக்கள் அதிக ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர். ஊரடங்கு, கட்டுப்பாடு என பல்வேறு நடவடிக்கைகளை பிரிட்டன் அரசு மேற்கொண்டு விட்டது. அப்படி இருந்தும் கொரோனா பரவல் கணிசமாக அதிகரித்து வருவதால் செய்வதறியாது பிரிட்டன் ஆட்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    மற்ற நாடுகளைப் போன்று பிரிட்டனிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. அங்கு வயதுக்கு வந்தவர்கள் அனைவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தகுதி ஆனவர்கள் என அரசு அறிவித்துள்ளது.

    ஒமைக்ரான் தொற்றுக்கு எதிராக பூஸ்டர் தடுப்பூசி சிறப்பான செயல்பாட்டை வழங்குவதாக பல்வேறு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதுதொடர்பாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது ட்விட்டர் பதிவில், 'ஒமைக்ரானுக்கு எதிராக கொரோனா தடுப்பூசிகள் எதிர்ப்பாற்றலை முழுமையாக தராது என்று நம்புகிறோம். எனவே முதல் டோஸ், இரண்டாம் டோஸ், பூஸ்டர் என எதுவாக இருந்தாலும் உடனடியாக அதற்கு பதிவு செய்து கொண்டு மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். உங்களையும், உங்களுக்கு விருப்பமானவர்களையும் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

    இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் கணிசமாக உயரத் தொடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரவு நேர ஊரடங்கு, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தியேட்டர்கள் மூடல் என அதிரடியான அறிவிப்புகளை டெல்லி அரசு இன்று வெளியிட்டிருக்கிறது.

    தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இரவு நேர ஊரடங்கு போடப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஒமைக்ரான் பரவலை கவனத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Published by:Musthak
    First published:

    Tags: Corona

    அடுத்த செய்தி