பத்திரிகையாளர்கள், ப்ளாக் எழுதுவோரை ஒடுக்க புதிய சட்டம்... ஒப்புதல் அளித்த புதின்!

’சுதந்திரமாகச் செயல்படும் ஊடகங்களுக்கு இச்சட்டம் கட்டுப்பாடு விதிக்கிறது. அரசுக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்க இச்சட்டம் உதவும்’

பத்திரிகையாளர்கள், ப்ளாக் எழுதுவோரை ஒடுக்க புதிய சட்டம்... ஒப்புதல் அளித்த புதின்!
புடின்
  • News18
  • Last Updated: December 3, 2019, 8:43 PM IST
  • Share this:
பத்திரிகையாளர்கள், ப்ளாக் எழுதுவோர் ஆகியோரை அந்நிய நாட்டின் ஏஜெண்டுகள் என முத்திரைக் குத்தி ஒடுக்கும் வகையில் புதிய சர்ச்சைக்குரிய ஒரு சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்.

பத்திரிகைச் சுதந்திரத்தை ஒடுக்கும் வகையில் இச்சட்டம் இருப்பதாக புதின் மீது குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. ஊடகம் மற்றும் தன்னார்வத் தொண்டு அமைப்புகளை அந்நிய நாட்டின் ஏஜெண்டுகள் என முத்திரையிடுவதற்கு ஏதுவாகக் கடந்த 2012-ம் ஆண்டிலேயே ரஷ்ய ஒரு சட்டத்தை பிறப்பித்திருந்தது.

ஆனால், இம்முறை விதிக்கப்பட்டிருக்கும் சட்டம் தனி ஒரு நபரைக் கூட விட்டுவைக்கக் கூடாது என்பதற்கான ஒரு ஒடுக்குமுறைச் சட்டம் என விமர்சிக்கப்படுகிறது. ’சுதந்திரமாகச் செயல்படும் ஊடகங்களுக்கு இச்சட்டம் கட்டுப்பாடு விதிக்கிறது. அரசுக்கு எதிராக எழும் குரல்களை ஒடுக்க இச்சட்டம் உதவும்’ என பல மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.


மேலும் பார்க்க: 'இந்தியாவுக்கு எதிராக இலங்கை ஒருநாளும் செயல்படாது’- அதிபர் கோத்தபய ராஜபக்ச!
First published: December 3, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்