கொரோனா காலத்தில் வேலையிழந்தோருக்கு வாரம் ரூ.22 ஆயிரம் உதவித் தொகை: அமெரிக்கா அறிவிப்பு

கொரோனா காலத்தில் வேலையிழந்தோருக்கு வாரம் ரூ.22 ஆயிரம் உதவித் தொகை: அமெரிக்கா அறிவிப்பு

அமெரிக்காவில் வேலையிழந்தோருக்கு சிறப்பு நிவாரணம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திய அழிவுகள் பயங்கரமானவை. பலி எண்ணிக்கை 3,26,772 ஆக உள்ளது. பொருளாதாரம் கடுமையாகச் சீரழிந்து லட்சக்கணக்கானோர் வேலையிழந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

 • Share this:
  வேறெந்த நாட்டைக் காட்டிலும் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பரவல் ஏற்படுத்திய அழிவுகள் பயங்கரமானவை. பலி எண்ணிக்கை 3,26,772 ஆக உள்ளது. பொருளாதாரம் கடுமையாகச் சீரழிந்து லட்சக்கணக்கானோர் வேலையிழந்து அவதிக்குள்ளாகியுள்ளனர்.

  கடந்த வார புள்ளி விவரங்களின் படி அமெரிக்காவில் கொரோனாவினால் வேலையிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளது. மேலும் புதிய ஊரடங்குகளும் பணியிலிருந்து நபர்களை வேலையிலிருந்து அனுப்புவதும், நிறுவனங்கள் மூடப்படுவதும் அதிகரித்தவண்ணமே உள்ளது.

  இந்நிலையில் கொரோனா கால பொருளாதாரப் பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில் ரூ.73.70 லட்சம் கோடி மதிப்பிலான மீட்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒப்புதல் அளித்துள்ளன.

  இந்த புதிய மீட்பு நடவடிக்கை தொடர்பாக குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சியினரிடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதில் எம்.பி.க்கள் மட்டத்தில் சமரசம் எட்டப்பட்டுள்ளது.

  அடுத்த கட்டமாக இது நாடாளுமன்றத்தில் இதற்கான உத்தரவு நிறைவேற்றப்படவுள்ளது. இதன்படி கொரோனா காலத்தில் வேலை இழந்தவர்களுக்கு வாரத்துக்கு ரூ. 22,110 உதவியாகக் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  இதுவல்லாது அனைத்து அமெரிக்கர்களுக்கும் தலா ரூ.44,220 கிடைக்கும். இதோடு கடுமையாகப் பாதிக்கப்பட்ட தொழில் நிறுவனங்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் சலுகைகள் வழங்கப்படவிருக்கின்றன.
  Published by:Muthukumar
  First published: