• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குடியேற தடை விதிப்பு - அமெரிக்கா

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் குடியேற தடை விதிப்பு - அமெரிக்கா

கோப்புப்படம் Image: AP

கோப்புப்படம் Image: AP

உலகம் முழுவதும் உள்ள கம்யூனிஸ்ட் அல்லது சர்வாதிகார கட்சிகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவில் குடியேறுவதற்கு அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
    வலதுசாரி பொருளாதார தத்துவத்தை பிரதானமாக கொண்டு இயங்கும் அமெரிக்காவுக்கும், ரஷ்யா, சீனா போன்ற இடதுசாரி நாடுகளுக்கும் இடையே பன்னெடுங்காலமாக பனிப்போர் நீடித்து வருகிறது. இதில் குறிப்பாக அண்மையில் சீனாவுக்கும் - அமெரிக்காவுக்கும் இடையேயான வர்த்தகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

    இந்தநிலையில் அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் அமைப்பு வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், உலகம் முழுவதும், எந்த நாட்டிலும் வாழும் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் அமெரிக்காவில் குடியேற தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



    கம்யூனிஸ்ட் அல்லது பிற சர்வாதிகார கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என அமெரிக்க அரசு குறிப்பிட்டுள்ளது. இதன்மூலம் அமெரிக்காவின் குடியுரிமை, அரசியல் சாசனம் மற்றும் ஜனநாயக மாண்புகள் பாதுகாக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankar
    First published: