விசா முடிந்து தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு: குவைத் மன்னர் சபா-அல்-அகமது

விசா முடிந்து தங்கியிருப்பவர்களுக்கு பொதுமன்னிப்பு: குவைத் மன்னர் சபா-அல்-அகமது
மன்னர் சபா-அல்-அகமது
  • Share this:

விசா காலம் முடிந்தும், குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்போருக்கு பொதுமன்னிப்பு வழங்க அந்நாட்டு மன்னர் சபா-அல்-அகமது முடிவு செய்துள்ளார்.


குவைத் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஏப்ரல் மாதம் 1-ஆம் தேதியில் இருந்து 30-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் விசா முடிந்த பின்னரும் குவைத்தில் தங்கி இருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாக விசா காலம் முடிந்தும், ஏராளமான தொழிலாளர்கள் குவைத் நாட்டில் தங்கி தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்க அந்நாட்டு மன்னர் சபா-அல்-அகமது முடிவு செய்துள்ளார்.


இதுமட்டுமின்றி அரசே அவர்களுக்கு  விமான டிக்கெட் எடுத்து அவரவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் இல்லாதவர்கள் அவர்களது நாடுகளின் தூதர்களை அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also see...



இந்தியாவில் கொரோனா பாதிப்பு விபரங்கள்:






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


First published: April 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading