Home /News /international /

‘எங்கள் கட்சியில் சேருங்கள்': மோடிக்கு கோரிக்கை வைத்த இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்!

‘எங்கள் கட்சியில் சேருங்கள்': மோடிக்கு கோரிக்கை வைத்த இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட்!

மோடி- நப்தலி பென்னெட் சந்திப்பு

மோடி- நப்தலி பென்னெட் சந்திப்பு

இஸ்ரேலில் நீங்கள் மிகவும் பிரபலமான நபர்,எங்கள் கட்சியில் சேர்ந்துவிடுங்கள்’ என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் ( Naftali Bennett)) கூறினார்.

    இஸ்ரேல் பிரதமர்  நப்தலி பென்னெட்டை  இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது, தங்களது கட்சியில் சேரும்படி மோடியிடம் நப்தலி பென்னெட் கூறினார். இதனை கேட்டு பிரதமர் மோடி அதிர்ந்து சிரித்தார்.

    பிரிட்டனின் கிளாஸ்கோ (Glasgow) நகரில்  ஐ.நா. பருவநிலை மாற்ற உச்சி மாநாடு (UNFCCC) கடந்த 31ம் தேதி தொடங்கியது.  இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.   COP26 climate summit நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

    மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். அதன் ஒருபகுதியாக இஸ்ரேலிய பிரதமர் நப்தலி பென்னெட்டை ( Naftali Bennett) மோடி சந்தித்தார். அப்போது, “ நான் உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்திய நாகரிகம், யூத நாகரிகம் ஆகிய இரண்டு தனித்துவமான நாகரிகங்களுக்கிடையேயான ஆழமான உறவான இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான உறவை மீண்டும் தொடங்கியவர் நீங்கள், அது உங்கள் இதயத்திலிருந்து வந்தது என்பதை நான் அறிவேன்” என்று இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னெட் கூறினார்.



    மேலும், இஸ்ரேலில் நீங்கள் மிகவும் பிரபலமான நபர்,எங்கள் கட்சியில் சேர்ந்துவிடுங்கள்’ என்று மோடியிடம் நப்தலி பென்னெட் கூறினார். இதனை கேட்டு பிரதமர் மோடி அதிர்ந்து சிரித்தார்.  இதனிடையே, இஸ்ரேல் பிரதமர் உடன் இந்திய பிரதமர் நடந்திய  பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்ததாக பிரதமர் மோடியின் அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

    இதையும் படிக்க: இனி அமெரிக்காவிலும் தீபாவளிக்கு பொது விடுமுறை - அமெரிக்க சட்டசபையில் மசோதா தாக்கல்!

    Published by:Murugesh M
    First published:

    Tags: Israel, Prime Minister Narendra Modi

    அடுத்த செய்தி