• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • தீபாவளியன்று ஹேப்பி ஹோலி கூறிய தமாஷ்- கேலிக்கு ஆளான பாகிஸ்தான் நாட்டு மாகாண முதல்வர்

தீபாவளியன்று ஹேப்பி ஹோலி கூறிய தமாஷ்- கேலிக்கு ஆளான பாகிஸ்தான் நாட்டு மாகாண முதல்வர்

தீபாவளி 2021

தீபாவளி 2021

தீபாவளி தினத்தன்று ஹேப்பி ஹோலி என்று வாழ்த்துக்களை தப்பும் தவறுமாகப் பாகிஸ்தான் சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி வெளியிட்டுள்ள செய்தி பரவலான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

  • Share this:
    தீபாவளி தினத்தன்று ஹேப்பி ஹோலி என்று வாழ்த்துக்களை தப்பும் தவறுமாகப் பாகிஸ்தான் சிந்து மாகாண முதல்வர் சையத் முராத் அலி வெளியிட்டுள்ள செய்தி பரவலான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

    இந்து சமூகத்தினருக்கு தீபாவளி வாழ்த்துக் கூறுகிறேன் என்று ஹோலி நல்வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார் சிந்து மாகாண முதல்வர். பிறகு முதல்வர் அலுவலகம் இந்த தவறான செய்தியை நீக்கி விட்டாலும் அதற்குள் அது வைரலாகி தீயாய்ப்பரவியது. நெட்டிசன்கள் சும்மாவே ஒருவரை கேலியும் கிண்டலும் செய்வார்கள், ஏதோ இவர்கள் தவறே செய்யாதவர்கள் போல். இப்படி தவறு செய்தால் சும்மா விடுவார்களா? கேலியும் கிண்டலும் பரவலாகியது.

    உலகத் தலைவர்கள் அனைவரும் உலகம் முழுதும் உள்ள இந்துக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் தீபாவளி வாழ்த்துக்களை இந்துக்களுக்கு பகிர்ந்துள்ளார். இந்நிலையில் சிந்து மாகாண முதல்வர் ட்வீட் முதல்வர் அலுவலகத்தினரால் நீக்கப்படுவதற்கு முன்பாக ஆயிரக்கணக்கில் ஸ்க்ரீன் ஷாட்கள் எடுக்கப்பட்டு பகிரப்பட்டு கேலி செய்யப்பட்டது.

    சிந்துவில் தான் பாகிஸ்தானின் பெரும்பாலான இந்துக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் முதல்வர் ஒருவருக்கு தீபாவளிக்கும் ஹோலிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருப்பது வருத்தத்திற்குரியது என்கிறார் பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர்.



    பிறகு சிறுபான்மை இந்துக்களுக்கு ஆதரவாக, தீபாவளி வாழ்த்து தெரிவித்து இதே முதல்வர் அலுவலகம் பல செய்திகளை வெளியிட்டாலும் சேதம் ஏற்கெனவே நெட்டிசன்களால் ஏற்படுத்தப் பட்டு விட்டது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: