நேச்சர் இதழில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆயிரக்கணக்கான உயிரினங்களின் விரிவான புதிய மதிப்பீட்டின் படி, உலகெங்கிலும் உள்ள ஊர்வன உயிர் இனங்களில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிந்து போகும் அபாயத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது.
ஆமைகள் மற்றும் முதலைகளில் பாதிக்கும் மேற்பட்டவை உட்பட சுமார் 21% ஊர்வன இனங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன என்று சமீபத்திய ஆய்வில் கூறப்பட்டு உள்ளது. ஆமைகள், முதலைகள், பல்லிகள், பாம்புகள் மற்றும் டுவாடாரா உள்ளிட்ட 10,196 ஊர்வன இனங்களை ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.
தங்களது ஆழமான ஆய்விற்கு பிறகு ஊர்வன இனங்களில் ஐந்தில் ஒரு பங்கு - கலபகோஸ் ஆமைகள் முதல் இந்தோனேசிய தீவுகளின் கொமோடோ டிராகன் வரை, மேற்கு ஆப்பிரிக்காவின் காண்டாமிருக வைப்பர் முதல் இந்தியாவின் கரியல் (சொம்புமூக்கு முதலை) வரை அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர். தங்களது இந்த ஆய்வில் ஊர்வனவற்றில் சுமார் 21% இனங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இவை அழிந்து கொண்டிருக்கும் அபாயத்தில் அல்லது இன்னும் சில ஆண்டுகளில் அழிந்து போகும் அபாயத்தில் உள்ளன என்பதை கண்டறிந்து உள்ளோம்.
தவிர ஏற்கனவே அழிந்துவிட்ட 31 இனங்களையும் அடையாளம் கண்டுள்ளோம் என்று குறிப்பிட்டு உள்ளனர். உலகெங்கிலும் உள்ள பல்லுயிர் பெருக்கத்தின் பேரழிவு சரிவுகள் பூமியில் உள்ள உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாகக் காணப்படுகின்றன. 40 சதவீதத்திற்கும் அதிகமான நிலநீர்வாழ் உயிரினங்கள், 25 சதவீத பாலூட்டிகள் மற்றும் 13 சதவீத பறவைகள் அழிவை சந்திக்க நேரிடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். இருப்பதிலேயே முதலைகள் மற்றும் ஆமைகள் மிகவும் ஆபத்தில் உள்ள உயிரினங்களாக கண்டறியப்பட்டுள்ளன.
இவற்றில் முறையே 58 சதவீதம் மற்றும் 50 சதவீதம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. இறைச்சிக்காக மற்றும் மனிதர்கள் வாழுமிடங்களில் இருந்து அகற்றப்படுவதற்காக முதலைகள் கொல்லப்படும், அதே நேரத்தில் ஆமைகள் பாரம்பரிய மருத்துவ காரணங்களுக்காக குறி வைக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கவலை தெரிவித்து உள்ளனர். வறண்ட வாழ்விடங்களில் வசிக்கும் சுமார் 14% உயிரினங்களுடன் ஒப்பிடும்போது, காடுகளை ஒட்டிய வாழ்விடங்களில் உள்ள ஊர்வன இனங்களில் சுமார் 27% அழிந்துபோகும் அபாயத்தில் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
காலநிலை அச்சுறுத்தல்:
ஆபத்தில் உள்ள மற்றொரு நன்கு அறியப்பட்ட பாம்பினம் ராஜநாகம். உலகின் மிகப்பெரிய விஷ பாம்பான ராஜநாகமும் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைந்து வருவது மிகவும் கவலைக்குரியது. விவசாயம், மரம் வெட்டுதல், காடுகளை அழித்தல், ஆக்கிரமிப்பு மற்றும் நகர்ப்புற வளர்ச்சி ஆகியவை ஊர்வனவற்றிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது கண்டறியப்பட்டது.
ALSO READ | ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை? – சத்குரு அதிரடி பதில்!
இது தவிர உலகளாவிய காலநிலை மாற்றங்களும் சுமார் 10 சதவீத ஊர்வன இனங்களுக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டது. ஒரு சில உயிரினங்களுக்கு அவசரகால பாதுகாப்பு தேவைப்படுவதன் அவசியத்தை இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது. இந்த ஆய்வு பணி கிட்டத்தட்ட 1,000 விஞ்ஞானிகள் மற்றும் 52 இணை ஆசிரியர்களை உள்ளடக்கியது மற்றும் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Climate change