ஆண் தும்பிகளின் நிறம் மாறும் இறக்கைகள் - பருவநிலை மாற்றத்தால் ஏற்பட்ட கட்டாய மாற்றம்!

தும்பி

பல டிராகன்ஃபிளைகளின் இறக்கைகளில் அடர் கருப்பு நிறத்தின் திட்டுகள் உள்ளன. அவை தனக்கேற்ற துணையை ஈர்க்கவும், தன்னுடைய போட்டியாளர்களை அச்சுறுத்தவும் பயன்படுத்துகின்றன.

  • Share this:
பெரும்பாலும், ஆண் தும்பிகள், வெப்பமான மற்றும் குளிரான இடங்களில், வெப்பமான தட்பவெட்ப நிலைகளுக்கு ஏற்றவாறு தன்னுடைய இறக்கையின் நிறங்களை மாற்றிக்கொள்ளும் தன்மை உடையவை என்று ஆய்வாளார்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பருவநிலையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், அதீதமான வானிலை மாற்றங்கள், உருகும் பனிப்பாறைகள், ஆகியவற்றை தோற்றுவித்ததோடு மட்டுமில்லாமல், விலங்கு, பறவை மற்றும் பூச்சி இனங்களையும் பாதித்துள்ளது. புரொசீதிங்க்ஸ் ஆஃப் தி நேஷனல் அகாடெமி ஆஃப் சயின்சஸ் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில், விஞ்ஞானிகள் குழு, ஆண் டிராகன்ஃபிளைகள், அதிகரித்து வரும் வெப்பநிலையை சமாளிக்கும் விதமாக, தங்கள் இறக்கைகளின் நிறமியில் மாற்றங்களை ஏற்படுத்தி வெளிப்படுத்துகின்றன என்று கண்டறிந்துள்ளது.

செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் லிவிங் எர்த் கொலாபரேட்டிவ்வை சார்ந்த போஸ்ட்-டாக்டரல் ஆய்வாளரான மைக்கேல் மூரே, இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கினார். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் கள நிலையத்தின் இயக்குனர், டைசன் ஆராய்ச்சி மையம், கிம் மெட்லி மற்றும் செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழக உயிரியல் இணை பேராசிரியர் கேசி ஃபோலர்-ஃபின் மற்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக இளங்கலை பட்டதாரிகள் ஆகியோர் இந்த ஆராய்ச்சி குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Also read:  தோனிக்கு 40 வயசு.. 2021 ஐபிஎல் தான் அவரின் கடைசி போட்டியா?

ஆராய்ச்சியாளர்கள் குழு, ஃபீல்டு வழிகாட்டிகள் மற்றும் குடிமக்கள்-விஞ்ஞானி கவனிப்புகளைப் பயன்படுத்தி, 319 வகையான டிராகன்ஃபிளைகளின் டேட்டாபேஸ் ஒன்றை ஆய்வுக்காக உருவாக்கியுள்ளது. புகைப்படங்களில் காட்டப்பட்டுள்ள இறக்கைகளின் கோப்பு, iNaturalist இடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த புகைப்படங்கள், ஒரு விஞ்ஞானிகள் குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, எந்த இடங்களில் இருந்து பெறப்பட்டது மற்றும் அந்த இருப்பிடங்களில் ஏற்பட்ட காலநிலை மாறுபாடுகள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. கிட்டத்தட்ட 3,000 க்கும் மேற்பட்ட iNaturalist சமர்ப்பிப்புகள் ஆய்விலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட 10 இனங்கள் மீது, ஒற்றை ஆண் தும்பியின் மீது எந்த அளவு இயற்கையாக நிறம் மாறியுள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

Also read:   பிகில் படத்தை போட்டுக் காட்டி சிறுவனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள்.. சென்னை அரசு மருத்துவமனையில் ருசிகர சம்பவம்

10 விதமான உயிரினங்களில் ஒவ்வொன்றிலும் உள்ள டிராகன்ஃபிளைகள் அவற்றின் புவியியல் ரீதியான வரம்புகளின் அடிப்படையில், வெப்பமான மற்றும் குளிர்ந்த பகுதிகளில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதில் ஆய்வு கவனம் செலுத்தியது.

பல டிராகன்ஃபிளைகளின் இறக்கைகளில் அடர் கருப்பு நிறத்தின் திட்டுகள் உள்ளன. அவை தனக்கேற்ற துணையை ஈர்க்கவும், தன்னுடைய போட்டியாளர்களை அச்சுறுத்தவும் பயன்படுத்துகின்றன. இருந்தாலும், இறக்கைகளில் அடர் நிறத்தின் நிறமி இருப்பது டிராகன்ஃபிளைகளின் உடல் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று மூரே தெரிவித்தார். இத்தகைய நிறமிகள் முதலில் டிராகன்ஃபிளைகளுக்கு துணையை கண்டுபிடிக்க உதவும் நோக்கத்திற்காக இயற்கையாக அமைந்துள்ளன என்றாலும், ஏற்கனவே பூமி வெப்பமடைதல் அதிகரித்து வரும் நேரத்தில், இந்த நிறமிகள் ஆண் தும்பிகளுக்கு கூடுதலாக வெப்பத்தை ஏற்படுத்தும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஆண் டிராகன்ஃபிளைகள் வெப்பமான மற்றும் குளிரான இடங்களில் அடர்த்தி குறைவான இறக்கை நிறமினை உருவாக்குவதன் மூலம், அதிக சூடான வெப்பநிலைகளுக்கு எப்போதும் தன்னை மாற்றிக்கொள்வதை ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு வெப்பமான பகுதிகள் மற்றும் குளிரான பகுதிகளில் வாழும் அதே இனங்களின் சேர்ந்த அனைத்து உயிரினத்துக்கும் பொருந்தும். நமது கிரகத்தில் வெப்பநிலை அதிகரித்துக் கொண்டே வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆண் டிராகன்ஃபிளைகள், தங்கள் இறக்கைகளில் குறைந்த நிறத்தை உருவாக்குவதன் மூலம் இந்த உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்று மூரே கூறினார்.
Published by:Arun
First published: