அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபராக இருந்த காலத்தின் அரசின் முக்கிய தகவல் அடங்கிய ஆவணங்கள் அவரின் பழைய அலுவலகத்தின் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முடிந்தவுடன் அரசின் ஆவணங்கள் திரும்பி அளிக்கப்பட வேண்டிய நிலையில் அரசின் முக்கிய ஆவணங்கள் அவரின் அலுவலகத்தில் இருந்து தற்போது கண்டறியப்பட்டதால் அதிபர் ஜோ பைடன் மேல் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
நவம்பர் மாதத்தில் வாஷிங்டனில் உள்ள பென் பைடன் மையம் எனப்படும் அவரின் அலுவலகத்தில் இருந்து அதிபரின் வழக்கறிஞர்கள் 10க்கும் மேற்பட்ட அரசின் ஆவணங்களைக் கண்டுபிடித்துள்ளனர். உடனடியாக அதனைத் தேசிய ஆவணங்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அவை அதிபர் ஜோ பைடன் துணை அதிபராகப் பதவி வகித்தக்காலத்தை சேர்ந்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடைந்தவுடன் அரசின் ஆவணங்களைக் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது வரை ஒப்படைக்கப்படாத ஆவணங்கள் கண்டறியப்பட்டதால் சர்ச்சைக்குள்ளான சூழ்நிலை நிலவுகிறது.
மேலும் அங்குக் கண்டறியப்பட்ட ஆவணங்கள் அரசின் பாதுகாக்கப்பட வேண்டிய ரகசிய ஆவணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த ஆவணங்களை அமெரிக்கச் சட்டத்துறை ஆய்வு செய்து வருகின்றனர் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதமே ஆவணங்கள் கண்டறியப்பட்ட நிலையில் தற்போது தான் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது என்ற பேச்சு அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் நிகழ்கிறது. அதிபரின் தனி அலுவலகத்திற்கு அரசு ஆவணங்கள் ஏன் சென்றது என்ற கேள்வியும் எழும்பியுள்ளது. மேலும் ஆவணங்களில் அரசின் முக்கிய ரகசியங்களும் இடம்பெற்றிருக்கலாம் என்று தகவல்களும் கசிந்து வருகிறது. அமெரிக்க எபிஐ தற்போது முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த செய்தியை வெள்ளை மாளிகை உறுதி செய்த நிலையில் அதிபர் ஜோ பைடன் தற்போது அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோ சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: America, Joe biden, White house