ஹோம் /நியூஸ் /உலகம் /

ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் வெடித்து 5ம் வகுப்பு மாணவன் பலி!

ஆன்லைன் வகுப்பின்போது மொபைல் வெடித்து 5ம் வகுப்பு மாணவன் பலி!

மாதிரி படம்

மாதிரி படம்

மாணவர் பயன்படுத்திய மொபைல் பேட்டரி அதிக சூடால் வெடித்துச்சிதறியது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆன்லைன் வகுப்பின் போது மொபைல் போன் வெடித்துச் சிதறியதில் ஏற்பட்ட தீ காயத்தினால் 11 வயதாகும் 5ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக பலரும் வீடுகளில் முடங்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. அலுவலக வேலை என்றாலும் சரி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் என்றாலும் சரி இன்று அனைத்துமே டிஜிட்டல் சேவையை நம்பியிருக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. கேம், வீடியோக்கள் என்று பொழுதை கழிப்பார்கள் என்ற எண்ணத்தில் பொதுவாகவே குழந்தைகளிடம் நாம் மொபைல் போனை கொடுக்க மாட்டோம், ஆனால் இன்று ஆன்லைன் வகுப்புகளுக்காக நாமே நமது குழந்தைகளிடம் மொபைல் போனை கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.

குழந்தைகள், மாணவர்கள் மொபைல் போன்கள், பிற எலக்ட்ரானிக் கேட்ஜெட்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுவதுடன், வேறு வகையிலான ஆபத்தையும் ஏற்படுத்துகிறது.

Also read: காங்கிரசுடன் கசந்த உறவு.. அமரிந்தர் சிங் புதிய கட்சி தொடங்குகிறார்! – பாஜகவுக்கு ஆதரவு?

அந்த வகையில் ஆன்லைன் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த போது ஸ்மார்ட் போன் வெடித்துச் சிதறியதில் மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியாகி இருக்கிறார்.

வியட்நாம் நாட்டின் நிகே அன் மாகாணத்தில் நாம் டென் மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயதாகும் 5ம் வகுப்பு மாணவர் ஒருவர் கடந்த அக்டோபர் 14ம் தேதியன்று மாலை ஆன்லைன் வகுப்பில் பாடம் படித்துக் கொண்டிருந்தார். அந்த மாணவர் மொபைலை சார்ஜில் போட்டவாறு, காதுகளில் இயர் போனை மாட்டி பாடங்களை கவனித்து வந்த போது திடீரென மாலை 4 மணியளவில் அந்த மாணவர் பயன்படுத்திய மொபைல் பேட்டரி அதிக சூடால் வெடித்துச்சிதறியது.

Also read:  ‘பிரதமர் மோடி படிக்காதவர்.. ராகுல் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்’ – கர்நாடகாவில் காங்கிரஸ் vs பாஜக!

இந்த விபத்தினால் அந்த மாணவரின் உடையில் தீப்பற்றி எரிந்திருக்கிறது. காயத்தில் தவித்த மாணவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரின், உடல்நிலை மோசமடைந்தது. பின்னர் சிகிச்சை பலனின்றி அந்த மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நாம் டென் மாவட்டத்தில் கடந்த மாதமே பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், திடீரென மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்தால் எப்படி கையாள்வது என்பதால் வாரத்தில் ஒரு நாள் மட்டும் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் பாடம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த விபத்தில் அந்த மாணவர் உயிரிழந்திருக்கிறார்.

Published by:Arun
First published:

Tags: Mobile phone, Online class