அமெரிக்காவில் எதிர்வரும் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னதாக தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதத் தொடர்ந்து அமெரிக்க தேர்தல் களம் சூடுபிடித்தது. தேர்தல் நெருங்குவதால் களம் இன்னும் உக்கிரமாகியுள்ளது. இந்நிலையில், அமெரிக்கா தற்போது பிளவுபட்டு நிற்பதால் உள்நாட்டு அமைதியின்மை ஏற்படும் அபாயம் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஸுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
தேர்தல் நாளுக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் வன்முறை வெடிக்கலாம் என எச்சரித்துள்ள மார்க், சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் இடம் பெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார். வரும் வாரம் ஃபேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் என்று கூறியுள்ள மார்க், தாங்கள் புதிய அச்சுறுத்தல்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அதேசமயம் ஜனநாயக ஒருமைப்பாட்டையும், மக்களின் உரிமையையும் காக்க போராடுவோம் என்றும் மார்க் ஸுக்கர்பெர்க் கூறியுள்ளார்.
Published by:Rizwan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.