Home /News /international /

கொரோனாவிலிருந்து மீண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்

கொரோனாவிலிருந்து மீண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தயாராகும் மக்கள்

இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து கொரோனா தொற்று ஏற்படுத்திய பாதிப்பால் உலகமே துவண்டு போயிருந்தாலும், மெல்ல அதிலிருந்து மீண்டு கிறிஸ்துமஸை கொண்டாட தயராகி வருகிறது.

    சீனாவில் தொடங்கி சின்னச் சின்ன தீவுகளையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸால் 2020 ஆம் ஆண்டின் கொண்டாட்டங்கள் அத்தனையும் முடக்கப்பட்டு விட்டன. கிட்டத்தட்ட 10 மாத போராட்டத்திற்கு பின் மெல்ல மீண்டு வந்துள்ள உலக மக்கள் ஆண்டின் கடைசி விழாவான கிறிஸ்துமஸை கொண்டாட தயாராகி வருகின்றனர். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக உலகின் முக்கிய நகரங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன,

    அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகர சாலைகளில் கடைகளின் முன்பாக சரம் சரமாக விளக்குகள் தொங்கவிடப்பட்டு விழாக்காலத்திற்கு தயாராகி வருகின்றனர். கடைகளின் வெளிப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளுக்கு அழகழகான ஆடைகள் அணிவிக்கப்பட்டு விளக்கொளியில் அவை ஜொலிக்கின்றன.

    ஜெர்மனியின் பெர்லின் நகரில் பாரம்பரியமான நட்கிராக்கர் (nutcracker) எனப்படும் சிப்பாய் உருவங்களை மின் விளக்குகளால் பிரமாண்டமாக உருவாக்கியுள்ளனர். சாலையோரங்களில் உள்ள மரங்களையெல்லாம் கிறிஸ்துமஸ் விளக்குகள் அலங்கரித்துள்ளன.

    ஃபிரான்ஸின் பாரிஸ் நகரில் இருபுறமும் மரங்கள் அணிவகுக்கும் சாம்ப்ஸ் எலிசீஸ் (Champs Elysees) பகுதியில் கொத்துக்கொத்தான சிவப்பு வண்ண விளக்குகளால் மரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. மின்விளக்குகளால் ஆன கோலங்கள் கட்டடங்களின் முகப்புகளில் இடம் பிடித்துள்ளன.

    மேலும் படிக்க...வேளாண் சட்டங்கள் விவசாயிகளின் தடைகளை தகர்த்துள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் கிராண்ட் பேலஸ் எனப்படும் உலக பாரம்பரிய தலத்தின் முன்பாக 59 அடி உயர பிரமாண்ட கிறிஸ்துமஸ் மரம் நிறுவப்பட்டுள்ளது. 5 டன் எடை கொண்ட இந்த மரத்தை அலங்கரிக்க 9 மணி நேரம் பிடித்துள்ளது. இந்த மரத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் நீளமுள்ள அலங்கார இழைகள் சுற்றப்பட்டுள்ளன. பூக்களின் வடிவிலான 250 விளக்குகளைக் கொண்டு ஒளி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

    விழாக்கள் மக்களின் மனதில் புதிய நம்பிக்கைகளை விதைக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக உலகம் முழுதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டத் துவங்கியுள்ளன.

    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Christmas, CoronaVirus

    அடுத்த செய்தி