தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்கும் சான்டா கிளாஸ்.. அமெரிக்காவில் கிறிஸ்துமஸை கொண்டாட புதிய ஏற்பாடு

தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்கும் சான்டா கிளாஸ்.. அமெரிக்காவில் கிறிஸ்துமஸை கொண்டாட புதிய ஏற்பாடு

தனிநபர் இடைவெளியைக் கடைபிடிக்கும் சான்டா கிளாஸ்..

கிறிஸ்துமஸை கொண்டாடவரும் குழந்தைகள் கொரோனா அச்சமின்றி சான்டா கிளாஸ்களோடு உரையாடி மகிழும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து வருகின்றனர். சான்டாகிளாஸ்களைச் சந்திக்க வரும் குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் இடையில் அக்ரிலிக்கால் ஆன தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா அச்சமின்றி குழந்தைகள் சான்டா கிளாஸ்களோடு உரையாடி மகிழ்கின்றனர்.

ஆண்டுக்கு ஒருமுறை தரிசனம் தரும் சான்டாகிளாஸ்களோடு குழந்தைகள் எடுக்கும் புகைப்படத்தில் தடுப்பு இருப்பது தெரியாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள்.

Also read: ட்ரைவிங் செய்தபடி சாலையைக் கடந்த நாய்.. வைரல் வீடியோ!

அமெரிக்காவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 14.2 மில்லியன் என்ற அளவில் உள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,82,829-ஆக உள்ளது. இந்தப் பின்னணியில், அங்கு கிறிஸ்துமஸைக் கொண்டாட இப்படியான புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: