ஹோம் /நியூஸ் /உலகம் /

நியூசிலாந்தின் 41-வது பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்!

நியூசிலாந்தின் 41-வது பிரதமரானார் கிறிஸ் ஹிப்கின்ஸ்!

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்

நியூசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ்

கொரோனா பெருந்தொற்று தடுப்பு அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்கிறார் கிறிஸ் ஹிப்கின்ஸ்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaNew ZealandNew Zealand

நியூசிலாந்தின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் பதவியேற்றுக் கொண்டார். 9 மாதங்களில் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விலைவாசியை குறைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஹிப்கின்ஸ் உறுதியளித்துள்ளார். நியூசிலாந்தின் பிரதமராக இருந்த ஜெசிண்டா ஆர்டெர்ன், கடந்த வாரத்தில் பதவிவிலகினார். இதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராகவும், தொழிலாளர் கட்சித் தலைவராகவும் காவல் துறை அமைச்சராக இருந்த 44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வுசெய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, நாட்டின் 41-வது பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸும், துணை பிரதமராக கார்மெல் செப்புலோனியும், ஆளுநர் சிண்டி கிரோ முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர்.நியூசிலாந்து நாடாளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல், வரும் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. இதில், ஆளும் தொழிலாளர் கட்சியைவிட, கன்சர்வேட்டிவ் கட்சிக்கே ஆதரவு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால், கிறிஸ் ஹிப்கின்ஸுக்கு நெருக்கடி நிலவுகிறது.

எனினும், கொரோனா பெருந்தொற்று தடுப்பு அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றவராக திகழ்கிறார் கிறிஸ் ஹிப்கின்ஸ்.

சிப்பி (chippy) என்று அழைக்கப்படும் ஹிப்கின்ஸ் பிரதமராக பதவியேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர், அவசரகோலத்தில் கொள்கைகளை வகுக்கப் போவதில்லை என்று தெரிவித்தார். விலைவாசியைக் குறைக்க வரும் மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

கடினமாக உழைக்க விரும்பும் நியூசிலாந்தைச் சேர்ந்த அனைவருக்கும் வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிறந்த வாழ்க்கை அமைவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் கிறிஸ் ஹிப்கின்ஸ் உறுதியளித்தார்.

First published:

Tags: New Zealand, Prime minister