ஹோம் /நியூஸ் /உலகம் /

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தேர்வு

ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக கிறிஸ் ஹிப்கின்ஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiaaucklandaucklandauckland

நியூசிலாந்து நாட்டின் பிரதமர் பொறுப்பில் இருந்து ஜெசிந்தா ஆர்டென் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், புதிய பிரதமரை தேர்வு செய்ய ஆளும் தொழிலாளர் கட்சி முடிவெடுத்தது. இதற்கான போட்டியில் கிறிஸ் ஹிப்கின்ஸ் களமிறங்கிய நிலையில், மற்ற உறுப்பினர்கள் யாரும் விருப்பம் தெரிவிக்கவில்லை.

இதைத் தொடர்ந்து, கிறிஸ் ஹிப்கின்ஸ் ஆளும் தொழிலாளர் கட்சியின் தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே, நியூசிலாந்து நாட்டின் அடுத்த பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் விரைவில் பதவி ஏற்கவுள்ளார். முன்னதாக, ஜனவரி 19ஆம் தேதி அன்று நியூசிலாந்து நாட்டின் பிரதமர் பதவில் இருந்து விலகுவதாக ஜெசிந்தா ஆர்டென் அறிவித்தார்.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் தொழிலாளர் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்ற நிலையில், ஜெசிந்தா பிரதமராக தேர்வானார். தொடர்ந்து 2020இல் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று 2ஆவது முறையாக ஜெசிந்தா பிரதமரானார்.

6 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த ஜெசிந்தா இனி தன்னிடம் நாட்டை வழிநடத்தும் முழு ஆற்றல் தன்னிடம் இல்லை எனவே பதவி விலகுகிறேன் என அறிவித்தார். அத்துடன் அடுத்த தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை எனவும் அவர் கூறினார். ஜெசிந்தாவின் இந்த திடீர் அறிவிப்பு காரணமாக நியூசிலாந்து புதிய பிரதமரை தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.

இதையும் படிங்க: காரில் சீட் பெல்ட் அணியாத பிரிட்டன் பிரதமர்.. அபராதம் விதித்து காவல்துறை அதிரடி..!

வரும் அக்டோபர் 14ஆம் தேதி நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது. அதுவரை கிறிஸ் ஹிப்கின்ஸ் பிரதமராக தொடர்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. 44 வயதான கிறிஸ் கடந்த ஆட்சியின்போது ஜெசிந்தாவின் அமைச்சரவையில் முக்கிய புள்ளியாக விளங்கியவர். சுகாதாரத் துறை அமைச்சராக ஜெசிந்தா அரசில் பணியாற்றிய கிறிஸ் கோவிட்-19 பெருந்தொற்றை அரசு சிறப்பாக எதிர்கொள்வதற்கு முக்கிய காரணமாக விளங்கினார்.

First published:

Tags: New Zealand, Prime minister