• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • முக்கிய சீன அரசியல் பிரபலம் மீது நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பரபரப்பு செக்ஸ் புகார்

முக்கிய சீன அரசியல் பிரபலம் மீது நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை பரபரப்பு செக்ஸ் புகார்

Chinese tennis star

Chinese tennis star

நான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் ஜாங் ஜி ஓர்லியின் மனைவிக்கு இது தெரியும் என பெங் ஷுவாய் கூறியிருக்கிறார்..

  • Share this:
முன்னாள் உலகின் நம்பர் 1 வீராங்கனையாக திகழும் பிரபல டென்னிஸ் நட்சத்திர வீராங்கனை ஒருவர் சீனாவின் முக்கிய அரசியல் பிரபலம் ஒருவர் தன்னை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துவந்ததாக பகீர் புகார் ஒன்றை மீடூ (me too) பாணியில் அம்பலப்படுத்தியிருக்கிறார்.

பெண்கள் தாங்கள் அனுபவித்து வந்த பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மீடூ எனப்படும் இயக்கத்தின் மூலம் சமூக வலைத்தளங்களில் தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர். தாங்கள் சின்ன வயதில் அனுபவித்த செக்ஸ் ரீதியிலான துன்புறுத்தல்களையும், அதிகாரவர்க்கத்தினர் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையும், குறிப்பிட்ட காலத்தில் பல்வேறு காரணங்களால் வெளிப்படுத்த முடியாமல் போனாலும் பல வருடங்களுக்கு பின்னரும் அந்த கொடுமையை அம்பலப்படுத்த மீடூ அவர்களுக்கு மேடை அமைத்து கொடுத்தது..

இந்தியா மட்டுமல்லாது பல்வேறு நாடுகளிலும் இந்த மீடூ இயக்கம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீனாவிலும் மீடூ இயக்கம் பிரபலமடைந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அங்கு மீடூ பல்வேறு நபர்களின் சுயரூபத்தை வெளிக்கொண்டுவந்தது என்றபோதிலும் இதுவரையிலும் பெரிய பிரபலங்கள் ஆதாரபூர்வமாக இதில் சிக்காமல் இருந்து வந்தனர்.

சீனாவின் மூத்த துணை அதிபராகவும், சீன கம்யூனிஸ்ட் கட்சியில் பெரும் செல்வாக்கு பெற்று விளங்கி வந்தவருமான ஜாங் ஜி ஓர்லி மீது பகிரங்க குற்றச்சாட்டினை அந்நாட்டின் டென்னிஸ் நட்சத்திரமும் முன்னாள் இரட்டையர் உலக நம்பர் 1 வீராங்கனையுமான பெங் ஷுவாய் பரபரப்பு புகாரை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

Also read:  மரபணு சோதனை மூலம் தனக்கு 50 சகோதரர்கள் இருப்பதை அறிந்து ஷாக் ஆன பெண் டிக்டாக் பிரபலம்!

கடந்த செவ்வாயன்று டென்னிஸ் நட்சத்திரம் பெங் ஷுவாய் தனது அதிகாரப்பூர்வ வெய்போ சமூக வலைத்தள பக்கத்தில் (ட்விட்டர் போன்றது), முன்னாள் துணை அதிபர் ஜாங் ஜி ஓர்லி தன்னை பல ஆண்டுகளாக பலவந்தப்படுத்தி பாலியல் வன்புணர்வு செய்து வந்ததாகவும், அடிபணிய வைத்து தன்னுடன் பல ஆண்டுகளாக அவர் இந்த கொடுமையை செய்து வந்ததாகவும் கூறியிருக்கிறார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக உயர்ந்த பதவியான 7 பேர் மட்டுமே கொண்ட பொலிட் பீரோ உறுப்பினர் குழுவில் இடம்பிடித்தவர் ஜாங் ஜி ஓர்லி, அவர் மீது இப்படியொரு குற்றச்சாட்டை டென்னிஸ் வீராங்கனை வைத்ததை பார்த்த நெட்டிசன்களுக்கு இது பேரதிர்ச்சியாக இருந்தது. இருப்பினும் அந்த பதிவு சிறிது நேரத்திற்குள்ளாகவே அழிக்கப்பட்டிருந்தது.

Also read:  வேண்டுமென்றே செருப்பு அணிந்து கோவிலுக்குள் நுழைந்து வீடியோ வெளியிட்ட இளைஞர்கள்!

ஸ்கிரீன்ஷாட்கள் அடிப்படையில், டென்னிஸ் நட்சத்திரம் கூறியிருந்தது, “ஆரம்பத்தில் நான் முடியாது என கூறினேன். ஆனாலும் அவர் பலவந்தப்படுத்தினார். நான் அழுதேன். என்னை அடிபணியவைத்து பல ஆண்டுகள் இந்த உறவை அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். நான் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு என்னிடம் எந்த ஆதாரமும் கிடையாது. ஆனால் ஜாங் ஜி ஓர்லியின் மனைவிக்கு இது தெரியும். 2012ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை என்னிடம் தகாத முறையில் நடப்பதை ஜாங் ஜி ஓர்லி தொடர்ந்து கொண்டிருந்தார். சமீபத்தில் அவராகவே என்னிடம் பேசுவதை நிறுத்தும் வரையில் அது தொடர்ந்து கொண்டிருந்தது என பெங் ஷுவாய் கூறியிருக்கிறார்.

Also read:  கணவருடன் பிரச்னை என போலீஸ் நிலையம் சென்ற பெண்ணின் வாழ்க்கையை நாசம் செய்த இன்ஸ்பெக்டர்!

தற்போது வெய்போ தளத்தில் டென்னிஸ் என தேடினால் கூட எந்த தகவலும் கிடைக்கவில்லை,  என ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறியிருக்கிறது. (சீன அரசின் அழுத்தத்தால் பதிவு நீக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது) மேலும் இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும் அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

ஒற்றையரில் 2 பட்டமும், இரட்டையரில் 22 பட்டங்களையும் பெற்றுள்ள பெங் ஷுவாய், முதல் முறையாக சீன வீராங்கனை ஒருவர் உலக தரவரிசையில் முதல் இடம் பிடித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆவார்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: