Home /News /international /

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை வந்த சீன உளவு கப்பல்!

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி இலங்கை வந்த சீன உளவு கப்பல்!

 சீனாவின் உளவு கப்பல்

சீனாவின் உளவு கப்பல்

இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீனாவின் உளவு கப்பல் இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகம் வந்தடைந்தது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    222 மீட்டர் நீளம், 26 மீட்டர் அகலம்  11,000 டன் எடை உள்ள பொருட்களை சுமக்கும் வல்லமை,  கடல் சார் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு, பிரமாண்ட ராக்கெட்டுகளை ஏவும் வசதி என அதி நவீன தொழில் நுட்பத்தை கொண்டது சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங் 5. இந்த கப்பலை இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தி எரிபொருள் நிரப்பிக்கொள்ள அனுமதி கேட்டது சீனா. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவிக்க முதலில் அனுமதி மறுத்தது இலங்கை அரசு. ஆனால் அதற்கு மறுநாளே யுவான் வாங் 5 கப்பல்  ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் முகாமிட இலங்கை ஒப்புக்கொண்டது.

    ஹம்பந்தோட்டா துறைமுகம் ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் இடையிலான கடல் வழியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது.  இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகளுக்காக சீனாவிடமிருந்து கடன் பெற்ற இலங்கை, அதில் 9500 கோடி ரூபாய் கடனை திரும்பி செலுத்த முடியாததால், 99 ஆண்டுகளுக்கு குத்ததைக்கு விட்டுள்ளது,

    Also Read : சீன அதிகாரிகளின் செயலால் அலறியடித்து ஓடிய மக்கள் - அதிரவைக்கும் வீடியோ

    ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள யுவான் வாங் 5. கப்பலால் 750 கிலோ மீட்டர் தூரத்தை கண்காணிக்க முடியும்.  தமிழ்நாட்டின் கன்னியாகுமரி தொடங்கி, கேரளா, ஆந்திரா வரை உளவு பார்க்க முடியும்.  இது மட்டுமல்லாமல் யுவான் வாங் 5 கப்பலில்  சென்சார்கள் அமைந்துள்ளால் இந்தியா  நடத்தும் ஏவுகணை சோதனைகளை துல்லியமாக கண்காணிக்க முடியும்.

    தற்போது இந்தியா ஒடிஷாவின் அப்துல் கலாம் தீவில்  ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.  இதன் காரணமாகவே, யுவான் வாங் 5 கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்திற்கு வர இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது.  இந்தியாவின் கவலைகளையும் எதிர்ப்பையும் கண்டுக்கொள்ளாத இலங்கை அரசு,  சீனக்கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது. இதனை தொடர்ந்து 2000 பேருடன் ஹம்பந்தோட்டா துறைமுகத்தை வந்தடைந்தது யுவான் வாங் 5 கப்பல். இந்த கப்பலை இலங்கையின் துறைமுக அதிகாரிகளும், சீன அதிகாரிகளும் வரவேற்றனர்.

    மற்ற நாடுகளின் அழுத்தத்திற்கு அடிபணியாமல் இலங்கை தனது இறையாண்மை காக்கும் என்பதற்கு சீன கப்பலின் வருகை உதாரணமாக அமைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஆகஸ்ட் 22- ஆம் தேதி வரை ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் யுவான் வாங் 5 கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும். இலங்கைக்கு 4 பில்லியன் டாலர் உதவி, கடல் பகுதி கண்காணிப்புக்கு டார்னியர்,  விமானம் என பல உதவிகளை செய்து வருகிறது இந்தியா, எனினும்  பாதுகாப்பு பிரச்னையில் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை இலங்கை எடுத்துள்ளது இந்திய வெளியுறவு கொள்கையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: China, Sri Lanka

    அடுத்த செய்தி